NATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக 600 சுகாதாரப் பணியாளர்கள் பாதிப்பு

புத்ரா ஜெயா, செப் 18- இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரையிலான
காலக்கட்டத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக 600க்கும் மேற்பட்ட சுகாதாரப்
பணியாளர்கள் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா
கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களில் 406 பேர் அரசாங்க மருத்துவமனைகளிலும் எஞ்சியோர் தனியார்
மற்றும் பல்கலைக்கழக மருத்துவமனைகளிலும் பணியாற்றுகிறவர்கள் என்று அவர்
சொன்னார்.

இந்நோய்த் தொற்று காரணமாக மனோரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல
ஆலோசனைகள் வழங்கப்படுவதோடு அவர்கள் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை
அளிக்கவும் அனுமதிக்கப்படுவதில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உலக நோயாளிகள் தினத்தை முன்னிட்டு புத்ரா ஜெயா இன் ஆரஞ்ச் என்ற நிகழ்வை
தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோவிட் நோய்த் தொற்று காரணமாக குடும்பத்தாரிடமிருந்து விலகியிருக்க வேண்டிய
நிர்பந்தம், கடுமையான நிர்வாக நடைமுறையை பின்பற்ற வேண்டிய கட்டாயம், சோர்வு
மற்றும் கோவிட்-19 சிறப்பு அலவன்ஸ் பெறுவது தொடர்பான விவகாரங்கள் அந்நோய்த்
தொற்று கண்டவர்களை மனோரீதியில் மிகவும் பாதிக்கச் செய்து விட்டதாக டத்தோஸ்ரீ
அடாம் பாபா கூறினார்.


Pengarang :