–fotoBERNAMA (2020) COPYRIGHTS RESERVED
NATIONAL

கவனம், 1,16161 வேலையில்லா பட்டதாரிகள் ! உயர் கல்வி அமைச்சர் அறிவிப்பு

பாங்கி 28 செப்- கோவிட் 19 நோய் தொற்று காரணமாகச்  சுமார் 75 000 பட்டதாரிகள் வேலையின்றி அல்லல்படவேண்டிய சூழ்நிலை நிலவுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் நோராய்னி அமாட் கூறுகிறர். இது இவ்வாண்டு பட்டதாரிகளில் 25 விழுக்காடாகும் என்றார்  அவர்.

அவர் தனது அமைச்சு 2019 ம் ஆண்டின் பட்டதாரிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 41161 பட்டதாரிகள் வேலையின்றி இருப்பதும் அந்த எண்ணிக்கையை 2020 ம் ஆண்டு வேலையில்லா பட்டதாரிகளுடன்  சேர்த்தால் 1,16161 வேலையில்லா பட்டதாரிகள் ஆகும். அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்

பிரதமர் தொடக்கி வைத்த தொழில் முன்னேற்றம் மீதான மாநாட்டில் உரை நிகழ்த்திய அவர், பட்டதாரிகள் உயர்கல்வி மேற்கொள்ள நிதி உதவி உட்படத் தனது அமைச்சு எடுத்து வரும் பல நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்

தனது அமைச்சு வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை வழங்கச் சொஸ்கோ மூலம் MyFutureJobs எனும் இணையதளம் வழியும் தெக்குன் என்னும் சிறுதொழில் கடன்கள் வழியும்  உதவி வருவதாகக் கூறினார்.

மேலும் தனது அமைச்சு தேசியத் தொழிற்துறை கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள விருப்பதாகவும், அதன்வழி வெற்றி பெற்ற தொழில் முனைவர்களைக் கொண்டு இளம் தொழில் முனைவர்களுக்குப் பயிற்ச்சி அளிக்கப்படும் என்றார் அவர்.

அது தவிர எதிர்காலப் பட்டதாரிகளுக்குத்  தொழில் துறையிலும், சந்தை படுத்தல்கள் உட்படப் பல சவால்களைச் சமாளிக்க  உதவும் வகையில் தகவல் மற்றும் ஆலோசனை வழங்க இணையதளம் ஏற்படுத்தப்படும் என்றார் அவர்.

இது போன்ற பல்முனை  உதவித்திட்டங்களின் வழி பட்டதாரிகள் அவர்களின் தொழிற்துறை ஆற்றலையும் அநுபவங்களையும் மேம்படுத்திக்கொள்ள முடியும் என அமைச்சர் கருதுவதாகக் கூறினார்

 


Pengarang :