NATIONALSELANGOR

மந்திரி புசாருக்கு கோவிட்-19 தொற்று இல்லை வீட்டிலிருந்து பணியைத் தொடர்கிறார்

ஷா ஆலம், செப் 29- சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 சோதனையில் அவ்விருவருக்கும் அந்நோய்த் தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை மந்திரி புசார் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.

இறைவன் அருளால் நானும் என் துணைவியாரும் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளோம். எனினும், பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக அலுவல்களை வீட்டிலிருந்தே செய்து வருவதோடு கூட்டங்களையும் இயங்கலை வாயிலாக நடத்தி வருகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டிய நிகழ்வுகளை மற்ற ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளேன். அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருவேன் என்றார் அவர்.

இன்று தொடங்கி அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வரை தாம் வீட்டிலிருந்து அலுவல்களை கவனித்து வரப்போவதாக  மந்திரி புசார் அறிக்கை  ஒன்றில் கூறியிருந்தார்.

தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நேற்று சபாவிலிருந்து திரும்பிய மந்திரி புசார் தம்பதியர் கோவிட்-19 நோய்த் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர்.


Pengarang :