SELANGOR

செமினி ஆற்றில் தூய்மைக்கேடு நான்கு மாவட்டங்களில் குடி நீர் விநியோகத் தடை

ஷா ஆலம், அக் 4- செமினி ஆற்றில் ஏற்பட்ட நீர் தூய்மைக்கேடு காரணமாக சுங்கை செமினி மற்றும் புக்கிட் தம்போய் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டன.

இதன் விளைவாக பெட்டாலிங், கோல லங்காட், சிப்பாங், உலு லங்காட் ஆகிய மாவட்டங்களில் அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.

நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்ட காரணத்தால் 273 பகுதிகளை சேர்ந்த 3 லட்சத்து 9 ஆயிரத்து 605 பயனீட்டாளர்கள் நீர் விநியோகத் தடையை எதிர்நோக்கியுள்ளதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வர்த்தக தொடர்பு பிரிவுத் தலைவர் எலினா பாஸ்ரி கூறினார்.

இந்த நீர்த் தூய்மைக்கேட்டிற்கான காரணத்தை கண்டறியும் பணி சுங்கை செமினி மற்றும் துணை ஆறுகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நீர் விநியோகம் எப்போது வழக்க நிலைக்கு திரும்பும் என்பதை தற்போதைக்கு தீர்மானிக்க முடியாது எனக் கூறிய அவர், இவ்விவகாரம் தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்கள் ஊடகங்கள் மூலம் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ள பகுதிகள் குறித்த பட்டியல் இச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது


Pengarang :