ECONOMYPBTSELANGOR

கோவிட்-19: விதிகளை பின்பற்றாத வணிக மையங்களின் லைசன்ஸ் ரத்து

ஷா ஆலம், அக் 5-  கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து 
அதிகரித்து வருவதை தொடர்ந்து வர்த்தக மையங்கள் மீதான கண்காணிப்பை 
ஊராட்சி மன்றங்கள் தீவிரப்படுத்தியுள்ளன.

எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை பின்பற்றாத  
வணிக மையங்களுக்கு எதிராக லைசன்ஸ் பறிமுதல் உள்பட கடுமையான 
நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக் குழு 
உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இவ்விவகாரத்தில் நாம் விரிவான நிர்வாக நடைமுறையை கொண்டுள்ளோம். 
இதன் அமலாக்கத்தை கண்காணிப்பதுதான் தற்போதைய முக்கிய பணியாகும்.ஆகவே, ஊராட்சி மன்றங்கள் வர்த்தக மையங்கள் மீதான கண்காணிப்பை 
தீவிரப்படுத்தும் என்று அவர் மேலும் சொன்னார்.

மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் அனைத்து வர்த்தகமையங்களும் மீண்டும் செயல்படுவதற்கும், உணவகங்கள் பின்னிரவு 2.00 மணி வரை செயல்படவும் மாநில அரசு மாநில அரசு வாய்ப்பு வழங்கியிருந்தது.

Pengarang :