KLANG, 8 Okt — Kerajaan bakal mengenakan Perintah Kawalan Pergerakan Bersyarat (PKPB) di zon merah iaitu Sandakan, Papar, Tuaran di Sabah dan Klang di Selangor, bermula 9 Okt ini susulan peningkatan kes COVID-19 di kawasan tersebut. ?Kelihatan penduduk di sekitar Pekan Meru, Klang mematuhi Prosedur Operasi Standard (SOP) dengan memakai pelitup muka bagi mengelak penularan COVID-19 ketika tinjauan hari ini. ?–fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA?
ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில்  மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

ஷா ஆலம் 12-அக், சிலாங்கூர் மாநிலத்தில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய் தொற்று பரவலைத் தொடர்ந்து நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா ஆகிய மாநிலங்களில் 14-10-2020 நள்ளிரவு 12.00 முதல் அமலுக்கு வருகிறது என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்தார். 

இந்தக் கட்டுப்பாடு காலத்தில் கடும் நடமாட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுத்  தொழிற்சாலைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப் படுகிறது. ஆனால் உணவகங்களில், அங்கேயே அமர்ந்து உணவு உட்கொள்ள அனுமதியில்லை, பொட்டலங்கள் கட்டி எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதிக்கப் படுகிறது.

தொழில் காரணமாக மாவட்டம் கடந்து இன்னொரு மாவட்டம் செல்லுபவர்கள் போலீஸ் அனுமதி அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கடிதத்தைக் கொண்டிருக்க வேண்டும். அனைத்துச் சமயத் தளங்கள், கல்வி நிலையங்கள், விளையாட்டு மையங்கள் மற்றும் பொழுது போக்கு மையங்கள் செயல்பட அனுமதியில்லை. ஒரு குடும்பத்திற்கு இருவர் மட்டுமே வெளியில் சென்று பொருட்கள் வாங்க அனுமதிக்கப் படுகின்றனர்.

பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பசார், மளிகைக்கடைகள், பேரங்காடிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்கப் படுகிறது.  நடமாட்டக் கட்டுப்பாட்டினை அமல்படுத்தப் பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார். 


Pengarang :