NI
ECONOMYNATIONALSELANGOR

டத்தோ ஸ்ரீ அன்வார் பிரதமர் ஆவாரா! பில்லியன் டாலர்  கேள்வி ?

ஷா ஆலம் 14 அக்; இன்று மலேசியர்களிடம்  இருக்கும் மிகப் பெரிய கேள்வி நாட்டு  அரசியலில் என்ன நடக்கிறது? 

அன்வார்  இப்ராஹிம்  அடுத்த  பிரதமர் ஆவாரா?

இந்தப் பில்லியன் டாலர்  கேள்விக்குச்  சிலாங்கூர் இன்று விடையளிக்க முனைகிறது.

இன்று எல்லா மலேசியர்களும் ஒப்புக்கொள்ளும் ஒரு முக்கிய விவகாரம் நம் நாடு சுதந்திரத்திற்குப் பின் மிகப் பெரிய சவாலைச் சந்தித்துள்ளது இதிலிருந்து நாட்டை மீட்க நாட்டுக்கு நல்ல தலைமைத்துவம் வேண்டும் என்பதே!

திறமை மிக்க தலைவர் எல்லா மக்களாலும்  ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவர் உண்டா? யார் அவர் என்றால் அனைவரின் பார்வையும் அன்வார் பக்கமே திரும்பும் என்பதே நமது ஆணித்தரமான பதிலாக இருக்கும்..

அதனை உறுதி படுத்துவதாகவே கடந்த பொதுத்தேர்தல் முடிவு இருந்தது., ஆனால் சிலரின் நரித்தனத்தால், ஆட்சி பொறுப்பு அவரின் கைகளுக்கு எட்டாமல் தடுக்கப்பட்டது. பறிக்கப்பட்டது. என்பதே உண்மை!

ஆனால், ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்ற நமது பாடலுக்கு ஏற்ப  உண்மை, திறமை நேர்மை அதன் வலிமையை உலகம் ஒரு நாள் உணரும், அன்றே உன்னைக் கொண்டாடும் என்பதனை மலேசிய அரசியல் அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது. 

ஆம் பதவி வெறி கொண்டவர்கள் செய்தது தேசத் துரோகம், அநீதி, அதற்கான விலையை நாடும் மக்களும் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. மலேசியாவின் அடுத்த பிரதமராகத் துன் மகாதீருக்கு மாற்றாக அன்வார் வருவதை அவர் மனப்பூர்வமாக ஏற்க வில்லை, அதில் அவருக்குச் சம்மதமில்லை. 

அதனை, துன் மகாதீர் பதவியிலிருந்த 22 மாதங்களில் தனது பதவி காலத்தை எப்படி நீடிப்பது, அன்வாரின் அரசியல் பலத்தை எப்படி உடைப்பது என்பதிலேயே துன் மகாதீர் அதிகக் கவனம் செலுத்தி வந்தார்.

இவரின் வாரிசாக டான் ஸ்ரீ மொகிதீன் யாசினைக் கொண்டு வந்தார் என்பதனை அவரின் கட்சியைச் சேர்ந்தவர்களே அம்பலப்படுத்தி விட்டனர். அதாவது துன் மகாதீர் தனது பதவி காலத்தை நீடிக்க அன்வாருக்கு வீசிய வலையில் அவரே மாட்டிக்கொண்டார்.

 அதாவது மலாய்க்காரர்களின் ஒற்றுமை என்ற பெயரில் மகாதீர் தீட்டிய கத்தியையே துன் மகாதீருக்கு  எதிராக டான் ஸ்ரீ மொகிதீன் யாசின் திருப்பினார், பிரதமர் நாற்காலியில் அமர்ந்து விட்டார்..

ஆனால், திருடன் மன்னராகவோ, கோமாளி கதாநாயகனாகவோ வேஷம் மட்டுமே போடலாம். உண்மை வாழ்க்கைக்கு அது ஒத்துவராது என்பதனையும், போலி எது அசல் எது என்று மக்கள் விரைவில் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதைக் காட்டுவதாகவே சமீபகால நாட்டு நடப்புகள் காட்டுகின்றன..

அதுவே இப்பொழுது நடக்கிறது. எந்த அன்வாரை, அவரின் பல இன ஈடுபாட்டை, பல இன கட்சியைக் காரணம் காட்டி ஒதுக்கினார்களோ, அவர்களே, நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்க அன்வாரை அழைக்கத் தொடங்கி விட்டனர்.

ஆம், அதற்குப் பின்னணியில் இருந்தது அம்னோ என்றால் அது மிகையாகாது. ஒருவரைத் தண்டிப்பதை விடக் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வு முக்கியம், நாடு முக்கியம், நீண்ட நாட்களாக நாடு ஒரு சகுனியின் சாகச வலையில் சிக்கிச் சின்னப் பின்னமாகி விட்டது. அது நாட்டையே முற்றிலும் அழிக்கும் முன், சகுனியின் நாச செயலால் பாதிக்கப் பட்டவர்கள், சிக்கித் தவித்தவர்கள்  ஒன்று கூடி சிந்தித்ததால் ஏற்பட்ட மாற்றம் இது, இதுவே மக்களின் தீர்ப்பு, இதுவே மன்னர்களின் எதிர்பார்ப்பு என்பதை சிலாங்கூர்கினி அறிகிறது. 


Pengarang :