SELANGOR

பேரரசரின் சிறந்த முடிவை சிலாங்கூர் மந்திரி புசார் வரவேற்றார் .

ஷா ஆலம் அக் 26;- கோவிட் 19 நோய் தொற்றினை எதிர்கொள்ள நாட்டில் அவசரக்கால உத்தரவுக்கு மாமன்னர் ஆணையிட வேண்டி டான் ஸ்ரீ மொகிதீன் யாசின் அமைச்சரவை முன்வைத்த கோரிக்கையை மாட்சிமை தங்கிய பேரரசர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பில்லா ஷா அவர்கள் நிராகரித்தை வரவேற்கிறோம்.

பேரரசரின் இந்தச் சிறந்த முடிவால் மாநில அரசு, மக்களின் நலன் சார்ந்த இதர விவகாரங்களின் மீது தனது முழு கவனத்தைச் செலுத்த இடமளித்துள்ளது என்றார் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி.

இப்பொழுது நானும் மாநில அரசாங்க இயந்திரமும், 2021 ம் ஆண்டுக்கான மாநில (வரவு \ செலவு) பட்ஜெட், கோவிட் !9 நோய் தொற்று, நீர் விநியோகம் போன்ற மக்கள் நலன் சார்ந்த இதர விவகாரங்களில் கவனம் செலுத்தலாம் என்றார் அவர்..

மாட்சிமைத் தங்கிய பேரரசரின் ஆலோசனைப்படியும், எல்லா மாநில அரசர்களும் ஆராய்ந்து எடுத்துள்ள நல்ல முடிவிற்கு அனைவரும் தலை வணங்க வேண்டும், எல்லா அரசியல் வாதிகளும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் தேசிய நிலைத் தன்மையையும் பாதிக்கும் எல்லா வித அரசியல் விளையாட்டுகளையும் நிறுத்தி கொண்டு நாடு மற்றும் மக்கள் எதிர் நோக்கும் சவால்களைச் சமாளிக்க உதவ அரசர்கள் வழங்கிய ஆலோசனை படி நடக்க வேண்டும் என்றார் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி


Pengarang :