SELANGOR

மெந்தாரி புதிய நோய் தொற்று மையத்தில், 17 புதிய நோய் தொற்று தோன்றியுள்ளது

ஷா ஆலம் அக் 26;- கடந்த இரண்டு வாரங்களில் அக்டோபர் 12ந்தேதி முதல் 25ந்தேதி வரைக்குமான காலத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய் தொற்று பாதிப்புக்கு 1291 பேர் உள்ளாகியுள்ளனர்.

சிலாங்கூர் கோவிட்-19 நோய் தொற்று செயற்குழுவின் புள்ளி விவரத்தின் படி பெட்டாலிங் சிகப்பு மண்டலத்தில் 532 பேர் இந் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும் அதில் ஆக அதிகமாகச் சுங்கை பூலோ துணை மாவட்டத்தில் மட்டும் 276 நோய்த்தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.

பெட்டாலிங் சிகப்பு மண்டலத்தின் மற்றத் துணை மாவட்டங்களான பெட்டாலிங்கில் 134 சம்பவங்களும், டாமன்சராவில் 100 சம்பவங்களும், புக்கிட் ராஜாவில் 22 நோய் தொற்று சம்பவங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பெட்டாலிங் சிகப்பு மண்டலத்தைத் தொடர்ந்து உலு லங்காட்டில் 214 சம்பவங்களும், கிள்ளானில் 206 சம்பவங்களும், கோம்பாக் மண்டலத்தில் 127 சம்பவங்களும், கோலலங்காட்டில் 105 சம்பவங்களும் , சிபாங்கில் 77 சம்பவங்களும், உலு சிலாங்கூரில் 16 சம்பவங்களும், கோலச் சிலாங்கூரில் 13 சம்பவங்களும், சபா பெர்ணத்தில் ஒரு சம்பவமும் பதிவாகி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆக, நேற்று பகல் மத்தியம் 12 மணிவரை 88 புதிய நோய்த்தொற்று சம்பவங்களுடன் சேர்த்து 3968 சம்பவங்களைச் சிலாங்கூர் பதிவு செய்துள்ளதாகவும். அதில் மெந்தாரி தொற்று மையம் என்னும் புதிய நோய் தொற்று மையத்தில் 17 புதிய நோய் தொற்று சம்பவங்கள் தோன்றியுள்ளதாகவும் அது தெரிவித்தது.


Pengarang :