NATIONALSELANGOR

மாமன்னரின் உத்தரவை அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும்-அன்வார் வலியுறுத்து

ஷா ஆலம், அக் 27- மலாய் ஆட்சியாளர்கள் வலியுறுத்தியள்ளதைப் போல் அதிகார மீறல்கள் நடைபெறாமலிருப்பதை உறுதி செய்ய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அம்சங்களை அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்படுவதிலிருந்து நாடு தப்பியது குறித்து தாம் இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.

ஆட்சியாளர்கள் அதிகாரத்துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நீதி பரிபாலனத்தை நிலை நிலை நிறுத்திய மலாய் ஆட்சியாளர்களுக்கு தாம் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகாரத்தையும் நீதி நெறிமுறைகளையும் தவறாகப் பயன்படுத்துவதை தொடர்படுத்தி மலாய் ஆட்சியாளர்கள் வெளியிட்ட நினைவூட்டல்களை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றார் அவர்.

அவசரகாலத்தை பிரகனடப்படுத்தும் விண்ணப்பம் நிராகரிப்படுவது தொடர்பில் அரச முத்திரை காப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் எல்லை என்ற வார்த்தை சிவப்பு மையால் குறிப்பிடப்பட்டிருந்தது.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தலைமையிலான அரசாங்கம் கொண்டு வந்த அவசரகாலச் சட்டம் தொடர்பான தீர்மானத்தை தற்போதைக்கு அமல்படுத்த வேண்டியதில்லை என்று பேரரசர் தெரிவித்திருந்தார்.

 

 

 

 

 

 

 

 


Pengarang :