NATIONALSELANGOR

கோவிட்-19 நோய் தொற்றினால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூர், அக் 27:-முன் நிலை பணியாளர்கள் என்ற ரீதியில் கோவிட்-19 நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவாரண்டீன் என்னும் தனிமைப் படுத்துதலில் உள்ளதுடன் 200க்கும் மேற்பட்டவர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார் உள் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அம்சா சைனுடின்.
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி சேவைத்துறையாக விளங்கும் போலீஸ் துறையின் அர்ப்பணிப்புக்குச் சான்றாக மேற்கண்ட எண்ணிக்கை விளங்குவதாக அவர் சொன்னார்.

குடிநுழைவு போன்ற இதர துறைகள் செவ்வனே செயல்படவும் போலீஸ் துறையின் சேவை தேவை படுவதாலும் போலீஸ்காரர்கள் பாதிக்கப் படுவதைத் தவிர்க்க முடியாது என்ற அவர்.

கடந்த மே மாதம் 1ந் தேதி தொடங்கி  அக்டோபர்  18ந்தேதி வரை 28 படகுகளில் நாட்டுகுள் வந்த 497 கள்ளக்குடியேறிகளை தடுக்கும் பணியிலும் இவர்களின் சேவைகள் இருந்துள்ளதாகக் கூறினார்

போலீசார் முகக் கவரிழை அணிந்திருந்தாலும், மக்களுடன் மிக அணுக்கமாகச் சேவையாற்றக்கூடிய நிலையிருப்பதால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க இயலாது என்றார் அவர்..


Pengarang :