ECONOMYNATIONALSELANGOR

வளர்ச்சிக்கு  இட்டுச்செல்லும் ஊக்கமூட்டும் பட்ஜெட்டை வழங்கினார்  மந்திரி புசார் அமிருடின் ஷாரி .

ஷா ஆலம், அக் 30- கோவிட் 19 நோய் தொற்றின் காரணமாக உலகம் படும் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டபோதிலும் சிலாங்கூரின் பட்ஜெட்டில் வெறும் 20 கோடி அல்லது 10விழுக்காடு மட்டுமே துண்டுவிழும் பட்ஜெட்டைத் தந்துள்ளார் சிலாங்கூர் மாநில மந்திரி புசார்.

இந்த ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதால் துண்டு விழுந்த அந்தப் பத்து விழுக்காடு நிதியையுங்கூட ஈட்டுவதற்கான வாய்ப்பு மாநிலத்திற்கு பிரகாசமாகவுள்ளது.

கோவிட் 19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பல திட்டங்களுடன், இவ்வாண்டு சிலாங்கூர் மக்களை வெகுவாகப் பாதித்த குழாய் நீர் விநியோகத்தை மேம்படுத்தவும், வேலை இழந்தவர்களுக்கு, வேலை வாய்ப்புகளை வழங்குவதிலும், மாநிலத்தை வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்லும் ஊக்கமூட்டும் பட்ஜெட்டை வழங்கினார்  சிலாங்கூர்  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி .

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி வரை சிலாங்கூர் அரசு வருமானமாக 199 கோடி வெள்ளியை ஈட்டியுள்ளது. இவ்வாண்டில் 220 கோடி வெள்ளியை வருமானமாக ஈட்டுவதற்கு இலக்கு வகுக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 90.46 விழுக்காட்டுத் தொகையை மாநில அரசு இதுவரை பெற்றுள்ளது.

வரி வசூலிப்பின் மூலம் 58 கோடியே 35 லட்சத்து 10ஆயிரம் வெள்ளியும் வரி அல்லாத வருமானம் மூலம் 177 கோடி வெள்ளியும் இதர வகை வருமானம் மூலம் 23 கோடியே 69 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளியும் பெறப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்தாண்டில் 232 கோடியே ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 535 வெள்ளி 51 காசு வருமானத்தை மாநில அரசு ஈட்டியது. அந்த தொகையில் 70 கோடியே 7 லட்சத்து 10ஆயிரம் வெள்ளி வரி வசூலிப்பின் மூலமாகவும் 133 கோடியே 84 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியும் இதர வருமானங்களின் வழி 28 கோடியே 10 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளியும் பெறப்பட்டன.


Pengarang :