Kebanyakan bas sekolah di Jammu kelihatan
ECONOMYSELANGORYB ACTIVITIES

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வருமானம் இழந்த பள்ளி வேன் நடத்துனர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் உதவி

கிள்ளான், டிச 7-  கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் நீண்ட காலத்திற்கு மூடப்பட்டுள்ளதால் கிள்ளான்,  கம்போங் ஜெயா மற்றும் தாமான் செந்தோசாவைச் சேர்ந்த  பள்ளி வேன் நடத்துனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார ரீதியாக இவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தமது கவனத்திற்கு கொண்டு 
வரப்பட்டதை தொடர்ந்து உரிய உதவிகளை செய்வதற்கான நடவடிக்கையில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் ஈடுபட்டார்.

இதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பாதிக்கப்பட்ட அந்த பள்ளி 
வேன் ஓட்டுநர்களுக்கு உணவுப் பொருட்களை அவர் விநியோகம் செய்தார். 

கோவிட்-19 நோய் காரணமாக பள்ளிகள் நீண்ட காலத்திற்கு மூடப்பட்டது பள்ளி 
வேன் ஓட்டுநர்களுக்கு பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக குணராஜ்  சொன்னார்.

இதன் காரணமாக அவர்கள் உதவியை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் இதர வழிகளில் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது குறித்து ஆலோசித்து வருகிறோம். போஸ் மலேசியா மற்றும் லாலாமூவ் போன்ற பொருள் விநியோக நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து செயல்படுவதும் அதில் அடங்கும்
 என்றார் அவர்.

மத்திய அரசு சிறப்பு நிதியுதவி அல்லது வேன்களுக்கான கடன் தொகையை திரும்ப செலுத்துவதை ஒத்தி வைக்க அனுமதி அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் 
அவர்களுக்கு உதவலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விவகாரம் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்பதோடு அவசியம் ஏற்பட்டால் மாநில சட்டமன்றத்திலும் 
எழுப்பப்படும் என்றார் அவர்.

Pengarang :