1 ஜனவரி 2021 முதல் சாலையில் மின்சார ஸ்கூட்டர்களுக்குத் தடை

கோலாலம்பூர், டிச 13: வரும் ஆண்டு ஜனவரி 1 முதல், தலைநகரச் சாலைகளிலும்  அல்லது அரசாங்கப் பதிவேட்டில் பதிவிடப்பட்ட எந்தச் சாலையிலும் மின்சார ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்படவுள்ளது. இவ்விதிகளை மீறும் நபர்கள்  மீது சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஜேபிஜே) 1987 இன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் .

கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை (ஜேஎஸ்பிடி) தலைவர் ஏசிபி சுல்கிப்லி யஹ்யா கூறுகையில், விளையாட்டு மைதானம், பாதசாரிப் பகுதிகள் மற்றும் தலைநகரில் உள்ள வணிக வளாகங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் போன்ற இடங்களில் மின்சார ஸ்கூட்டர்களைப் பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறது.

இலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைச்  சாலையில் பயன்படுத்த அனுமதிக்கப் படுவதில்லை, ஏனெனில் இது மற்றச் சாலைப் பயனர்களுக்கு ஆபத்தாக  முடிகிறது.  இதன்  பயன்பாடு ஆபத்தை ஏற்படுத்தும் அல்லது விபத்துகளை உண்டாக்கக்கூடும்” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

தலைநகரில் சாலைகளில் சவாரி செய்யும் மின்சார ஸ்கூட்டர் ரைடர்ஸ் நடவடிக்கைகள் குறித்துப் பொதுமக்களிடமிருந்து பல புகார்கள் வந்ததாக அவர் கூறினார்.

“இதுவரை, தலைநகரில் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதற்கு மூன்று பகுதிகளைக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர், அதாவது  டத்தாரான் மெர்டேகா, கே.எல்.சி.சி மற்றும் புக்கிட் பிந்தாங் ஆகிய சந்தை வாளகங்களில்  மட்டுமேயாகும் என்றார் அவர்.

இப்பொழுது “சாலையில் ஸ்கூட்டர் விளையாட்டில் ஈடுபடும் நபர்களைக் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர், இதுவரை நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை, ஜனவரி 1 ம் தேதி நடவடிக்கை எடுக்கத் தொடங்குவதற்கு முன்பே அந்த எச்சரிக்கை  ஆலோசனையை வழங்குகிறோம்  என்று அவர் கூறினார்.

மின்சார ஸ்கூட்டர்களைச் சாலையில் பயன்படுத்த விரும்பினால், சாலைப் போக்குவரத்துத் துறையின்  (ஜேபிஜே) சிறப்பு அனுமதி உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டுப்பாடு விதிகள் அமலுக்கு வந்த பின், முதல் முறையாகக்  குற்றம் சாட்டப் பட்டால், குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்ட நபர்கள் பிரிவு 54 ஜேபிஜே 1987 இன் கீழ் அக் குற்றத்திற்கு RM300 அபராதமும், இரண்டாவது முறையாக அதே குற்றத்துக்குப் பிடி பட்டால் RM1,000 அபராதம் அல்லது மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று சுல்கிப்லி கூறினார்.

இலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பயன்பாடு கடந்த மே மாதம் முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது, இப்போது சமூகத்தில் பிரபலமடைந்து வருகிறது, ஏனெனில் இது மக்கள் நடமாட்டத்திற்கு உதவுகிறது.

இலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாகனங்கள் மைக்ரோமொபிலிட்டி வாகனங்கள் என்ற வரையறையின் கீழ் வருகின்றன. ஜேபிஜே (அக்டோபர் 2020) பிரிவு 2 (ஆ) இன் சமீபத்திய திருத்தத்தின் கீழ், ஒரு மைக்ரோமோபிலிட்டி வாகனத்தின் வரையறை என்பது, ‘மின்சார மூலத்தால்  இயக்கும் வாகனம், அல்லது இயந்திரம் மனித சக்தி அல்லது மின் சக்தியால் இயங்கும் இயந்திரம் அல்லது மனித சக்தியின் கலவையாகவும் அது கொண்டிருக்கும் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கி.மீ. குள் இருக்க வேண்டும் என்கிறது  என்றார்  அவர்.

.


Pengarang :