SAINS & INOVASISELANGOR

சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்க இயற்கை உரத்தை பயன்படுத்த ஊக்குவிப்பு -ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் தகவல்

ஷா ஆலம், டிச 13- விவசாயத்தில் ஈடுபடுவதில் ஆர்வம் கொண்ட நகர் மற்றும் புறநகர்வாசிகள் பயிர்களுக்கு இயற்கை உரத்தை பயன்படுத்துவதை சிலாங்கூர் அரசு ஊக்குவிக்கிறது
 
இ்ரசாயன உரம் நிலத்தை மாசுபாடுத்துவதோடு சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை 
ஏற்படுத்துவதாக நவீன விவசாயத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் 
இஷாம் ஹஷிம் கூறினார்.

இவ்விவகாரத்தில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு 
இயற்கை உரத்துக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கிறேன். இயற்கை உரத்தை நீண்டகால அடிப்படையில் பயன்படுத்துவதன் மூலம் நிலத்தை செழிப்படையச் செய்யவும் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கவும் இயலும் 
என்றார் அவர்.

இங்குள்ள செக்சன் 35, ஆலம் இம்பியானில் சமூக பயிரிட்டு திட்டத்தின் கீழ்  
உதவிப் பொருள்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தி
யாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த பயிரிட்டு திட்டத்தின் வாயிலாக  நகர்ப்புற மக்கள் சிறு அளவில் விவசாயத்தில் ஈடுபட்டு வருமானம் பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

Pengarang :