ECONOMYNATIONAL

மூத்த எம்.ஏ.சி.சி அதிகாரிகளைப் போல் வேடமிட்டு, ரிங்கிட் .60,000 லஞ்சம் கோரியவர்கள்  கைது.

புத்ரா ஜெயா டிச 17: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) , மூத்த எம்.ஏ.சி.சி அதிகாரிகள் மற்றும் துணை பொது வக்கீல்கள்  போல  மாறுவேடமிட்டு, குற்றச்சாட்டுகளை  எதிர்நோக்கியிருக்கும்   நபர்களிடமிருந்து  அவர்கள்  மீதுள்ள  வழக்கை தீர்ப்பதற்கு ரிங்கிட் .60,000 லஞ்சம் கோரியவர்களை  ஊழல் தடுப்பு இலாக்க  தடுத்து வைத்துள்ளது.

தன்னை எம்.ஏ.சி.சி இயக்குனர் என்று கூறிக்கொண்ட ‘டத்தோ ராய்’ என அழைக்கப்படும் ஒரு முக்கிய சதிக்காரர் உட்பட 3 பேர் நேற்று மாலை 4.30 மணியளவில் இங்குள்ள ஒரு ஹோட்டலில் நடந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர், மற்றொருவர் நேற்று இரவு 8.30 மணியளவில்  மலாக்காவில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

இன்று முதல், ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் 39 முதல் 54 வயதுடைய ஒரு நிறுவன இயக்குனர்கள் உட்பட நான்கு பேரையும் டிசம்பர் 22 வரை ஆறு நாட்களுக்கு ரிமாண்ட் செய்ய மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஷா வீரா அப்துல் ஹலீம் அவர்களிடம்  விண்ணப்பம் செய்துள்ளது.

ஊழல் தடுப்பு வாரியத்தின் வட்டாரங்களின்படி, மாறுவேடத்தில் உள்ள நான்கு பேரும் புகார்தாரருக்கு எதிரான குற்றச்சாட்டை இலகுவான குற்றப் பிரிவுக்கு மாற்றுவதற்கும்,  ஊழல் தடுப்பு  இலாக்காவால் முடக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார்தாரரின்  வங்கி கணக்கை மீண்டும் திறப்பதற்கும் லஞ்சப் பணம் கோரியதாகக் கூறப்படுகிறது.

விசாரணைக்கு உதவ குழுவில் உறுப்பினராக உள்ள ஒரு பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிப்பதற்கான  வேலைகள்  தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்  எம்.ஏ.சி.சி  வட்டாரம்  தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டதை   உறுதிப்படுத்திய எம்.ஏ.சி.சி புலனாய்வு இயக்குனர் டத்துக் அஸ்மி கமாருசாமன், லஞ்சம் கோருவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் எம்.ஏ.சி.சி சட்டம் 2009 இன் பிரிவு 16 ன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது


Pengarang :