ECONOMYNATIONAL

முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ துங்கு அட்னான் ஊழல் வழக்கில் 12 மாதச் சிறை 20 லட்சம் வெள்ளி அபராதம்.

கோலாலம்பூர், டிச 21:இன்று காலை, முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ துங்கு அட்னான் துங்கு மன்சோர் எதிர்கொள்ளும் ரிங்கிட் 2 மில்லியன் ஊழல் வழக்கில் அவர் குற்றவாளி எனத் தனது தீர்ப்பை உயர் நீதிமன்ற நீதிபதி மொஹமட் ஜெய்னி மஸ்லான் வழங்கியுள்ளார்.

நேற்று, தனது 70 வது பிறந்த நாளை கொண்டாடிய துங்கு அட்னானுக்கு எதிராக இன்று காலை 9 மணிக்கு நீதிபதி மொஹாமட் ஜெய்னி தீர்ப்பு வழங்கினார்.

துங்கு அட்னான் துங்கு மன்சோர் அல்லது கூ நான் என்று அழைக்கப் படுபவர், ஒரு அரசு ஊழியராக, அதாவது கூட்டரசு பிரதேச அமைச்சர் என்ற வகையில், ஹெங் லியோங் இஸ்லாமிய வங்கி வழியாக ஏ.கே.எஸ்.பி.யின் இயக்குநராக இருக்கும் ஒரு தொழிலதிபர் டான் ஸ்ரீ சாய் கின் காங்கிடமிருந்து தனக்கு RM2 மில்லியனைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

தட்மன்சோரி ஹோல்டிங்ஸ் எஸ்.டி.என் பி.டி (டி.எச்.எஸ்.பி) க்குச் சொந்தமான சி.ஐ.எம்.பி வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது, அதில் (டி.எச்.எஸ்.பி) குற்றம்சாட்டப் பட்டுள்ளவருக்கு உரிமை உள்ளது, மேலும் ஏ.கே.எஸ்.பி நிறுவனம் அதன் உத்தியோகபூர்வப் பணிகளுடன் உறவு வைத்திருப்பது அறியப்படுகிறது.

கோலாலம்பூர் டாமன்சாரா நகர மைய சிஐஎம்பி வங்கி பெர்ஹாட், கிளையில், கடந்த 14 ஜூன் 2016 அன்று புத்ராஜெய நாடாளுமன்ற உறுப்பினர், தண்டனைச் சட்டத்தின் 165 வது பிரிவின் கீழ் இக்குற்றத்தைப் புரிந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டது, இது அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதத்துடன் கூடியது அல்லது தண்டிக்கப்பட்டால் இரண்டுமே விதிக்கப்படலாம்.

இவ் வழக்கு விசாரணைக்குத் துணை அரசு வக்கீல் ஜூலியா இப்ராஹிம் தலைமை தாங்கினார், வழக்கறிஞர் டத்தோ தான் ஹோக் சுவான் தற்காப்பு வாதக் குழுவை வழி நடத்தினார். தீர்ப்புக்குப் பின் சிறிது இடைவேளை விட்டு மீண்டும் நீதிமன்ற அமர்ந்த பொழுது தனது தீர்ப்பை வழங்கிய நீதிபதி , குற்றவாளிக்கு 12 மாதச் சிறையும் 20 லட்சம் அபராதமும் விதித்தார்.

குற்றவாளி மேல் முறையீடு செய்ய அவகாசம் வழங்கப் பட்டுள்ளது

இவ்வழக்கில் துங்கு அட்னான் துங்கு மன்சோர் இக்குற்றத்தைப் புரிந்துள்ளதை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்துள்ள வேளையில் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு அந்தக் குற்றத்தைப் புரியவில்லை என்பது மீது ஐயத்தை ஏற்படுத்தத் தவறி விட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
.


Pengarang :