PBTSELANGOR

காஜாங்கில் 10 குடியிருப்பாளர்கள் சங்கங்கள் பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றன

ஷா ஆலம், டிச 21: காஜாங் நகராட்சி மன்றம் (எம்.பி.கே.ஜே) பாதுகாப்பான நகரத் திட்டத்தின் மூலம் அதன் நிர்வாகப் பகுதியில் உள்ள 10 குடியிருப்பாளர்கள் சங்கங்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது.

காஜாங் நகராட்சியின் சார்பில் அதன் பொது உறவு அதிகாரி கமாருல் இஸ்மான் சுலைமான் அப்பொருட்களை எடுத்து வழங்கினார். அது குறித்து அவர் கூறுகையில், டிசம்பர் 15 ஆம் தேதி விநியோகிக்கப்பட்ட கருவிகள் ஜாக்கெட்டுகள், ஒளிரும் விளக்குகள் மற்றும் விசில்.

“இந்த அனைத்துக் கருவிகளையும் வழங்குவது குடியிருப்பாளர்களின் சங்கத்திற்கு அவ்வப்போது அந்தந்தப் பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும்.

“இந்த முயற்சி உள்ளூர் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும். எந்தவொரு கிரிமினல் தவறான நடத்தையையும் மறைமுகமாகத் தடுக்க முடியும், என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

நன்கொடைகளைப் பெறும் குடியிருப்பாளர்கள் சங்கங்கள்:

1. ஆர்க்கிட் அபார்ட்மெண்ட்ஸ் மேனேஜ்மெண்ட் கார்ப்பரேஷன்
2. தெர்த்தாய் அபார்ட்மெண்ட்ஸ் மேனேஜ்மெண்ட்
3. தாமான் செராஸ் ஜெயா குடியிருப்பாளர்கள் சங்கம் பிரிவு 1
4. ருக்குன் தெத்தாங்கா தாமான் ராக்கான்,
5. ஜாலான் 7/3 குடியிருப்பாளர்கள் சங்கம், பிரிவு 7, பண்டார் பாரு பாங்கி
6. கே.ஆர்.டி தாமான் ஜாஸ்மின் ஜாலான் 7
7. கம்பொங் பாசீர் பாரு மலிவு விலை குடியிருப்பாளர்கள் சங்கம்
8. தாமான் தியாரா இஸ்ட் குடியிருப்பாளர்கள் சங்கம்
9. பிலாங்கி செமிஞ்சி குடியிருப்பாளர்கள் சங்கம் பகுதி 6 & பகுதி 7
10. எஸ் ஆர் எஸ் தாமான் ஹார்மோனி ஆகியவையாகும் என்றார் அவர்.


Pengarang :