PENDIDIKANSELANGOR

டிப்ளோமா, பட்டப்படிபை மேற்கொள்ளும் 150 இந்திய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை சிலாங்கூர் அரசு ஏற்கும்- கணபதிராவ் தகவல்

ஷா ஆலம், ஜன 4-  டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் 150 இந்திய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை சிலாங்கூர் மாநில அரசு ஏற்றுக் கொள்ளும் என்று சமூக நலத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.

அரசாங்கத்தால் அங்கீரிக்கப்பட்ட உயர்கல்விக் கூடங்களில் பயிலக்கூடிய மாதம் 2,000 வெள்ளிக்கும் குறைவான வருமானத்தைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த உதவித் திட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில்  மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மாநில அரசு நேரடியாகவே  சம்பந்தப்பட்ட உயர்கல்விக் கூடங்களில் செலுத்தி விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

மொத்தம் ஆறு லட்சம் வெள்ளி செலவில்  இந்த கல்விக் கட்டண திட்டம் அமல்படுத்தப்படுவதாக சிலாங்கூர் கினி பத்திரிகையிடம் அவர் கூறினார்.

இத்திட்டத்தின் வழி டிப்ளோமா கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு 3,000 வெள்ளியும் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு 5,000 வெள்ளியும் வழங்கப்படும் என்றும் அவ குறிப்பிட்டார்.

மாணவர்கள் அங்கீகாரக் மனுபாரத்தை ஆதாரமாக காட்டி இதற்கான விண்ணப்பதை செய்யலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :