Adun Kota Anggerik, Najwan Halimi berbincang bersama Ketua Pegawai Eksekutif PKNS Real Estate Sdn Bhd (PREC), Fakru Radzi Ab Ghani pada tinjauan peniaga
PENDIDIKANSELANGORYB ACTIVITIES

கோத்தா அங்கிரிக் தொகுதியில் உள்ள 3 தமிழ்ப்பள்ளிகள் உள்பட 51 பள்ளிகளுக்கு நிதியுதவி

ஷா ஆலம், ஜன 5– கோத்தா அங்கிரிக் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மூன்று தமிழ்ப்பள்ளிகள் உள்பட 51 பள்ளிகளுக்கு 868,000 வெள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. பள்ளிகளில் அடிப்படை  வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.

மாநில அரசு வழங்கிய இந்த நிதி 33 சமயப்பள்ளிகள், 14 மஹாட் சமயப்பள்ளிகள், 3 தமிழ்ப்பள்ளிகள் மற்றும் ஒரு சீனப்பள்ளிக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று கோத்தா அங்கிரிக் சட்டமன்ற உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.

பள்ளித் தவணை தொடங்கவிருக்கும் நிலையில்  பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் புதிய இயல்பில் மாணவர்கள் கல்வி பயில்வதை உறுதி செய்வதற்கும் இந்த நிதியுதவி பெரிதும் துணை புரியும் எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 740 பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு 2 கோடியே 24 லட்சத்து 73ஆயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிவித்திருந்தார்.

இதன் வழி 538 மக்கள் சமயப் பள்ளிகளுக்கு 91 லட்சத்து 13 ஆயிரம் வெள்ளியும் 101 சீனப் பள்ளிகளுக்கு 60 லட்சம் வெள்ளியும்  நான்கு சீன இடைநிலைப்பள்ளிகளுக்கு 20 லட்சம் வெள்ளியும் 83 தமிழ்ப்பள்ளிகளுக்கு 43 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியும் 14 முபாலிக் பள்ளிகளுக்கு 10 லட்சம் வெள்ளியும் வழங்கப்படும் என அவர் கூறியிருந்தார்.

 


Pengarang :