இண்டா வாட்டர் குளத்தில் சாயக் கழிவுகள்- ரவாங் தொழிற்சாலையின் செயல் அம்பலம்

புத்ரா ஜெயா, ஜன 18- ரவாங்கிலுள்ள சாயத் தயாரிப்பு மற்றும் விற்பனைத் தொழிற்சாலை ஒன்று தடை செய்யப்பட்ட சாயக் கழிவுகளை  இண்டா வாட்டர் குழுமத்தின் கழிவு நீர்க் குளத்தில் கலந்துந்துள்ளாக சந்தேகிக்கப்படுகிறது.

தடை செய்யப்பட்ட அந்த கழிவுப் பொருள் இண்டா வாட்டர் குளத்தில் கலந்தது தொடர்பில் இண்டா வாட்டர் நிறுவனத்திடமிருந்து புகார் கிடைத்ததைத் தொடர்ந்து ரவாங். நியூட்டிக்கல் தொழில்பேட்டையிலுள்ள அந்த தொழிற்சாலை மீது திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் கூறியது.

அந்த தொழிற்சாலை தடை செய்யப்பட்ட சிவப்பு நிற சாயக் கழிவை பொது கழிவு நீர்க் குழாயில் கலந்து விட்டுள்ளது. அந்த கழிவு அதே தொழில் பேட்டைப் பகுதியிலுள்ள கழிவு நீர் குளத்தில் சென்று சேர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது என்று அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

இந்த நீர் மாசுபாடு சம்பவம் முன்கூட்டிய கண்டறியப்பட்டதால் நீர் வளத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதோடு நீர் சுத்திகரிப்பு மையங்களின் செயல்பாட்டிற்கு எந்த இடையூறும் உண்டாகவில்லை என அந்த அறிக்கை தெரிவித்தது.

அந்த தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் காவல் துறை, சுற்றுசூழல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆயர் சிலாங்கூர் நிறுவனம், செலாயாங் நகராண்மைக்கழகம் ஆகிய துறைகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

கழிவு நீர் சுத்திகரிப்பு பணிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் தடை செய்யப்பட்ட கழிவு பொருள்களை இண்டா வாட்டர் குளத்தில் கலக்கும் தரப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்பான் எச்சரித்தது.


Pengarang :