Kebanyakan bas sekolah di Jammu kelihatan
ACTIVITIES AND ADSSELANGORWANITA & KEBAJIKAN

மக்களுக்கு உதவி -மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு மீண்டும் புத்துயிரளிக்கவள்ளது

ஷா ஆலம், ஜனவரி 21: கோவிட் -19  நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கு உணவு கூடை உதவியைச் செயல்படுத்த மொத்தம் RM1.3 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

வாடகைக்கார் மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கும், மக்கள் வீட்டு வசதி வாரிய(பிபிஆர்)  வீடுகளில் குடியிருப்பவர்களுக்கும்  உணவு கூடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

ஆரம்பமாக உணவு கூடை உதவிகளை ஒராங் அசால் மற்றும் “கும்புலான் டாருள் ஏசான் பெர்ஹாட் திடக்கழிவு லாரி ஓட்டுநர்களும்  பெற்றனர்” என்று இன்று “கித்தா சிலாங்கூர் ” என்ற உதவித் திட்டத்தை தொடக்கி வைத்த பொழுது அவர் கூறினார்.

இதற்கிடையில், பெட்ரோல் வவுச்சர்கள், கால்நடை தீவனம் மற்றும் உணவு கூடைகள் உட்பட மொத்தம் 10160 விவசாயிகளுக்கு RM2 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  தெரிவித்தார்.

கால்நடை தீவனம் மற்றும் விவசாய உள்ளீடுகள் கால்நடை மற்றும் மீன்வளர்ப்பு ஆபரேட்டர்களுக்கு அனுப்பப்படும் போது மீனவர்களுக்கு ஒரு நபருக்கு RM 300 பெட்ரோல் வவுச்சர் கிடைக்கும் என்று அவர் விளக்கினார். “அவர்களும் உணவு கூடைகள் மற்றும் மூலப்பொருட்களையும் பெறுவார்கள்,” என்று அவர் கூறினார்.

நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை  2.0 ஐ எதிர்கொள்ள பல்வேறு சிறப்பு முயற்சிகள் மூலம் மக்களின் சுமையை குறைக்க RM73.877 மில்லியன் நிதி “கித்தா சிலாங்கூர் “என்ற உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்படுவதாக  அவர் கூறினார்.

இந்த திட்டம், மற்றவற்றுடன், கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவது உட்பட மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு மீண்டும் புத்துயிரளிக்கவுள்ளது என்று அவர் கூறினார்.


Pengarang :