ACTIVITIES AND ADSECONOMYNATIONAL

50,000  குடியிருப்பாளர்களுக்கு செல்கேர்  சிலாங்கூர் இலவச கோவிட் -19  பரிசோதனை

ஷா ஆலம், ஜனவரி 21 – கோவிட் -19  நோய்த் தொற்றயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சியில் நோய்த் தாக்கத்திற்கு எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் என்று அடையாளம் காணப்படும் மக்களுக்கு  உதவுவதற்கு செல்கேர்  சிலாங்கூர் இலவச கோவிட் -19  பரிசோதனைகளை 50,000 சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கு மேற்கொள்ள  ஏதுவாக சிலாங்கூர் அரசாங்கம் ஆர்.எம் 6 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

நேற்று RM73.877 மில்லியன் “கித்தா சிலாங்கூர் “என்ற உதவித் திட்டத்தை தொடக்கி வைத்து சிறப்பு உரையில், சிலாங்கூர்  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என்றார்.

குறிப்பாக வயதானவர்கள், மூத்த குடிமக்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள ஹீமோடயாலிசிஸ் மையங்களில் வயதானவர்கள், பி 40 குழு  மக்கள் மற்றும் மாணவர்கள் போன்ற இலக்குகள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.

“கோவிட் -19 க்கான சிலாங்கூர் பணிக்குழு செல்கேர் சிலாங்கூர்   (எஸ்.டி.எஃப்.சி)  மூலம் மாநில அரசு தொற்றுநோயை நிர்வகிப்பதில் சுகாதார அமைச்சிக்கு  இலவச சோதனை மற்றும் தனிமைப் படுத்தலில் உதவி வருகிறது என்று கூறினார்.

சிலாங்கூரில் மாநில நிர்வாகம் இதுவரை செல்கேர் சிலாங்கூர்   மூலம் 19,976 இலவச  பரிசோதனைகளை மேற்கொண்டதாக  அமிருடின் ஷாரி  தெரிவித்தார். “இந்த விஷயத்தில் மேலும் விரிவான தகவல்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு முதல், கோவிட் -19 நோய் பரவுவதைத் தடுப்பதற்கு நோய்த் தொற்றுக்கு இலக்காகும் பலவீனமான  குடியிருப்புகளை அடையாளம் கண்டு சோதித்து வருகிறது செல்கேர் சிலாங்கூர் .

கடந்த மார்ச் மாதம் முதல் MCO அமல்படுத்தப்பட்டபோது  கோவிட் -19 நோய் தாக்கத்திற்கு எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் என்று அடையாளங்கண்டு பரிசோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்த முதல் மாநிலம் சிலாங்கூர் என்றும் அவர் கூறினார்.


Pengarang :