Anggota polis melakukan sekatan jalan raya di Lebuhraya Persekutuan berhadapan Bangunan Majlis Perbandaran Klang (MPK), Klang pada hari ketiga pelaksanaan Perintah Kawalan Pergerakan akibat penularan Covid-19 pada 20 MAC 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALSELANGOR

நடமாட்டக்  கட்டுப்பாட்டு விதிகளை மீறிய குற்றங்களுக்கு தண்டனை அதிகரிக்கப்பட வேண்டும். 

கோலாலம்பூர், ஜனவரி 31:  நடமாட்டக்  கட்டுப்பாட்டு விதிகளை மீறிய குற்றங்களுக்காகத்  தண்டம்  செலுத்துபவர்களின் எண்ணிக்கை  ஒவ்வொரு வாரமும்  அதிகரித்து வருவதால், நடப்பிலுள்ள தண்டம் மற்றும் தண்டனைகளை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக  மலேசியா போலீஸ் படை  தலைவர் டான் ஸ்ரீ அப்துல்  அமீட் படோர் கூறுகிறார்.

ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான சம்மன்கள் பி.கே.பி எஸ்ஓபிக்கு கீழ்ப்படியாத மற்றும் மீறிய நபர்களுக்கு வழங்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை  சிறை தண்டனை இல்லை.

அவரைப் பொறுத்தவரை, சிலர் நல்ல காரணமின்றி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை கடந்து பயணம் செய்வதன் மூலம் நோய்த் தொற்று  அதிகரிக்கிறது, இதனால் நிலைமை மோசமடைகிறது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு விதிகளை மீறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அவர்களுக்கு  விதிக்கப்படும் தண்டனையின் தாக்கம் வழுவாக இல்லை என்று பொருள் படுகிறது.

இப்பொழுது  விதிக்கப்படும் தண்டம் வெள்ளி 1000 சிறியதாகக் கருதப் பட்டால், அதன் தொகையை  அதிகரிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப் படுவதற்கான காலம் கனிந்துள்ளதாகப்  பெர்னாமாவை இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

ஒரு எச்சரிக்கையுடன் விடுவிக்க இடம் கொடுக்காமல் விதி முறைகளுக்கு கீழ்ப் படியாதவர்களுக்குச் சம்மன் அனுப்புமாறு தனது படை உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பி.கே.பி செயல்படுத்தப் பட்டபோது கடமைகளில்  இருந்த மொத்தம் 474 பி.டி.ஆர்.எம் பணியாளர்கள் கோடு -19 நோய்த்தொற்றுக்கு இலக்காகிச் சிகிச்சைக்குச் சென்றுள்ள வேளையில்  மேலும் 1,628 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர் என்கிறார்  போலீஸ் படைத்தலைவர் அப்துல் ஹமீத்.

“நோய்த்  தொற்றுக்கு எதிராகச் செயல்பட வேண்டிய முன்னணி பாதுகாப்பு ஊழியர்களுக்கு, மருத்துவமனையில்  மற்றொரு முன்னணி  குழு சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது மிகவும் வருத்தமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

நாட்டில் கோவிட் -19 இன் பரவல் தற்போது  வேகம் எடுத்துள்ளதை அதிகரிப்பு காட்டுகிறது. வெள்ளிக்கிழமை மொத்தம் 5,725 நோய்த்தொற்றுகள் பதிவாகியிருந்த நிலையில், சனிக்கிழமை அது 5,728 ஆக பதிவாகியுள்ளன. புதிய தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 6,000 யை நெருங்குகிறது.

 


Pengarang :