NATIONALSAINS & INOVASI

கோவிட்-19 ஆய்வக பரிசோதனைக்காக 115 தொண்டூழியர்களுக்கு தடுப்பூசி

மெர்சிங், பிப் 1- கோவிட்-19 மூன்றாம் கட்ட ஆய்வக பரிசோதனைக்காக 115 தொண்டூழியர்கள் தடுப்பூசியைப் பெற்றனர். இதுவரை ஐந்து மாநிலங்களில் உள்ள ஒன்பது மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

இந்த தடுப்பூசித் திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் தகுதிகளை கொண்டிருக்கும் 18 வயதுக்கும் மேற்பட்ட சுமார் மூவாயிரம் தன்னார்வலர்களில் முதல் கட்டமாக இந்த 115 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த ஆய்வ பரிசோதனைக்கான மையங்களாக அம்பாங் மருத்துவமனை, சுங்கை பூலோ மருத்துவமனை, கெடா, சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனை, பினாங்கு மருத்துவமனை, பேராக், ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை, தைப்பிங் மருத்துவமனை மற்றும் சரவா பொது மருத்துவமனை ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மூன்று தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த ஆய்வக பரிசோதனைத் திட்டம் அடுத்த 13 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும். அந்த தடுப்பூசியின் ஆக்கத்தன்மை, ஆற்றல் மற்றும் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். எஞ்சியிருக்கும் தொண்டூழியர்கள் அடுத்த நான்கு வாரங்களில் தடுப்பூசியைப் பெறுவர் என்றார் அவர்.

மலேசியாவுக்கும் சீனாவுக்குமிடையிலான இந்த மூன்றாம் கட்ட ஆய்வக பரிசோதனை சீனாவின் உயிரியல் மருத்துவ, அறிவியல் மருத்துவ கழகத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.


Pengarang :