PBTSELANGORSENI

பொழுது போக்கு மையங்களில் இவ்வாண்டு கேளிக்கை வரி விதிக்கப்படாது- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், பிப் 3– பொழுது போக்கு மையங்களில் விதிக்கப்படும் நுழைவுக் கட்டணத்திற்கான கேளிக்கை வரியை செலுத்துவதிலிருந்து  சிலாங்கூர் மாநில அரசு  இவ்வாண்டு விலக்களித்துள்ளது. இந்த வரி விலக்களிப்பு வரும் மார்ச் மாதம் 18ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட பொழுது போக்கு சார்ந்த துறைகளின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

இந்த வரி விலக்களிப்பு காரணமாக மாநில அரசுக்கு இவ்வாண்டு 2 கோடியே 63 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி வருமான இழப்பு ஏற்படும் என்று அவர் சொன்னார்.

இது தவிர, 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை கேளிக்கை வரி 25 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்கப்படும். இதனால் ஆண்டுக்கு 2 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி வருமான இழப்பு ஏற்படும் என்றார் அவர்.

தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறை தொடர்ந்து தாக்குபிடிப்பதையும் தொழிலாளர்கள் குறிப்பாக சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்களின் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் கிடைப்பதையும் உறுதி செய்யும் நோக்கில் இந்த வரி விலக்கு அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த இக்கட்டான சூழலில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைப்பதற்கான வழி வகைகளை மாநில அரசு தொடர்ந்து ஆராய்ந்து வரும் என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

 

 


Pengarang :