PBTSELANGOR

கோவிட்-19 மதிப்பீட்டு மையமாக மெலாவத்தி அரங்கம் செயல்படும்

ஷா ஆலம், பிப் 7– இங்குள்ள மெலாவத்தி அரங்கம் பெட்டாலிங் மாவட்டத்திற்கான கோவிட்19 மதிப்பீட்டு மையமாக (சி.ஏ.சி.) நாளை முதல் செயல்படும்.

அதிகமான கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் இந்த அரங்கம்  கோவிட்-19 மதிப்பீட்டு மையமாக மாற்றப்படுவதாக சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙடிமான் கூறினார்.

தற்போது சுபாங் ஜெயா, எஸ்.எஸ்.15இல் உள்ள சுபாங் ஜெயா மாநகர் மன்ற மண்டபம் கோவிட்-19 மதிப்பீட்டு மையமாக செயல்பட்டு வருகிறது. எனினும், நாளொன்றுக்கு 500 நோயாளிகள் மட்டுமே அங்கு சிகிச்சை பெற முடியும். எனினும் மெலாவத்தி அரங்கம் 1,500 நோயாளிகள் வரை சிகிச்சை பெறுவதற்கான இட வசதியைக் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

பெட்டாலிங் மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டா.

கோவிட்-19 நோயாளிகளின் உடல் நிலையை மதிப்பீடு செய்யும் மையமாக இந்த சி.ஏ.சி. மையம் விளங்கும் இங்கு செய்யப்படும் மதிப்பீட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நோயாளியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அல்லது செர்டாங், மேப்ஸ் மையத்திற்கு அனுப்புவதா? அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்துவதா? எனத் தீர்மானிக்கப்படும் என்றார் அவர்.

மெலவாத்தி அரங்கம் தவிர்த்து,சிப்பாங், கிள்ளான், கோம்பாக், கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம்,  உலு சிலாங்கூர், உலு லங்காட், கோல லங்காட் ஆகிய எட்டு மாவட்டங்களில் இதே போன்ற மதிப்பீட்டு மையங்கள் செயல்பட்டு வருவதாகவும்அவர் சொன்னார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 


Pengarang :