PENDIDIKANSELANGORYB ACTIVITIES

கோத்தா அங்கிரிக் தொகுதியில் உள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு  25 ‘டேப்லெட்‘ விநியோகம்

ஷா ஆலம், பிப் 7– கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக கோத்தா அங்கிரிக் தொகுதியின் கம்போங் ஆயர் கூனிங் பகுதியைச் சேர்ந்த 25 ஏழை மாணவர்களுக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டேப்லெட் எனப்படும் வரைப்பட்டிகையை வழங்கினார்.

வசதி குறைந்த மாணவர்கள் என அடையாளம் காணப்பட்ட செக்சன் 6, பண்டார் அங்கிரிக் தேசிய பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு அந்த உபகரணம் வழங்கப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதை உறுதி செய்வதற்காக பள்ளிகளின் ஒத்துழைப்புடன் அந்த உபகரணங்கள் விநியோகம் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மின்னியல் உபகரணங்களை வழங்கியதன்  மூலம் மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கும் அவர்கள் வீட்டிலிருந்தவாறு கல்வி கற்பதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்று அவர் சொன்னார்.

வசதி குறைந்தவர்களின் நலனைக் காப்பதில் அரசு ஒரு போதும் பின்தங்கியதில்லை என்பதை இந்த உதவி நிரூபிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :