ஷா ஆலம், பிப் 11- கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதி சுற்றுவட்டார மக்களுக்கு 70 வெள்ளி கட்டணத்தில் கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்கிறது. இத்தகைய பரிசோதனையின் வழி கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களை கட்டுப்படுத்தும் அதேவேளையில் மக்களின் சுமையையும் குறைக்கவும் இயலும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார். நான்கு தனியார் கிளினிக்குகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனை இயக்கம் இன்று தொடங்கி இம்மாதம் 28 ஆம் தேதி வரை காலை மணி 10.00 முதல் மாலை 5.00 நடைபெறும் என்று அவர் சொன்னார். இதற்கு முன்னர், பல சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றை தடுக்கும் முயற்சியாக இத்தகைய கோவிட்-19 பரிசோதனை இயக்கங்களை மேற்கொண்டுள்ளனர். கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட கிளினிக்குகளை அணுகலாம். 1.Klinik Metro No 31, Jalan Anggerik Vanilla, Kota Kemuning, 40460 Shah Alam, Selangor 03-5131 3459 2.Klinik dan Surgeri Berjaya Park No 39-G, Jalan Sungai Rasau, F 32/F Berjaya Park, Seksyen 32, 40460 Shah Alam, Selangor. 03-5888 9938 3.Klinik Pro Medic 40, Jalan Anggerik Vanilla M 31/M, Kota Kemuning, 40460 Shah Alam, Selangor 03-5131 1101 4. Poliklinik Shaik 36-1, No, 8, Jln Anggerik Vanilla BE 31/BE, Kota Kemuning, 40460 Shah Alam, Selangor 03-5122 9030
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/01/Gana-PSX_20200811_121357-960x640.jpg)