MEDIA STATEMENTNATIONAL

ஐ-சினார் நிபந்தனைகள் ரத்து- சேம நிதிமீட்க அதிக வாய்ப்பு

கோலாலம்பூர், பிப் 12- ஊழியர் சேம நிதி வாரியத்தின் (இ.பி.எஃப்.) முதல் கணக்கிலிருந்து மேலும் அதிகமானோர் பணத்தை மீட்பதற்கு ஏதுவாக ஐ-சினார் திட்ட நிபந்தனைகள் அகற்றப்படுவதாக நிதியமைச்சர் டத்தோஸ்ரீ ஸப்ரூல் துங்கு அப்துல் அஜிஸ்  அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை மேற்கோள் காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஊழியர் சேம நிதி வாரியம், ஐ-சினார் ஆன்லைன் நிர்வாக முறை மற்றும் பரிசீலனை ஆகியவற்றை இந்த ஐ-சினார் விதிமுறை ரத்து உள்ளடக்கியிருக்கும் எனக் கூறியது.

தற்போதைய நெருக்கடி நிலையை இ.பி.எஃப். சந்தாதாரர்கள் சமாளிப்பதற்கு ஏதுவாக சேமிப்பை மீட்கும் நடவடிக்கை எளிதானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் வகையில் இந்த விதிமுறை ரத்து அறிவிக்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் வரை பொறுமை காத்த சந்தாதாரர்களுக்கு இ.பி.எஃப்.  நன்றி தெரிவித்துக் கொண்டது.

இவ்விவகாரம் தொடர்பான மேல் விபரங்களை இ.பி.எஃப். தனது அதிகாரத்துவ தொடர்பு சாதனங்கள் வழி விரைவில் வெளியிடும்.

இ.பி.எஃப். வெளியிடும் வெளியிடும் தகவல்களை மட்டுமே உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நம்பகமற்ற தகவல்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும்  அந்த அறிக்கை அறிவுறுத்தியது.


Pengarang :