PENDIDIKANSELANGOR

டீம் சிலாங்கூர் ஏற்பாட்டில் எஸ்.பி.எம். மாணவர்களுக்கு இலவச வகுப்புகள்

ஷா ஆலம், பிப் 13–  குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் ‘ஸ்கோர்லா எஸ்.பி.எம்.‘ எனும் கல்வித் திட்டத்தை தன்னார்வலர் அமைப்பான டீம் சிலாங்கூர் இலவசமாக மேற்கொள்ளவுள்ளது.

ஸூம் மற்றும் கூகுள் மீட் தளங்களை மையமாக கொண்டு இயங்கலை வாயிலாக நடத்தப்படும் இந்த பாடத் திட்டத்தில் ஐந்து பாடங்களுக்கு 100 மாணவர்கள் மட்டுமே பங்கேற்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அந்த அமைப்பின் கல்விப் பிரிவுத் தலைவர் முகமது ஹஸிப் ஃபிக்ரி ஜஸ்னி கூறினார்.

மலாய் மொழிப் பாடம் இம்மாதம் 13 ஆம் தேதி நடைபெறும் வேளையில் வரலாறு 14ஆம் தேதியும் ஆங்கிலம் மற்றும் கணிதம் 20 மற்றும் 21ஆம் தேதிகளிலும் இயற்பியல் 27ஆம் தேதியும் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

முதலில் வருவோருக்கு முதல் சலுகை என்ற அடிப்படையில் இந்த இந்த பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதால் ஒரு வகுப்பில் மட்டும் கலந்து கொள்ள முடியும் என்ற கட்டுப்பாடு மாணவர்களுக்கு விதிக்கப்படாது என்றும் அவர் சொன்னார்.

பயிற்சி பெற்ற மற்றும் கல்வித் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஆசிரியர்களால் இந்த வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆர்வம் உள்ள மாணவர்கள் http://bit.ly/skorlah என்ற அகப்பக்கம் வாயிலாகவும் அல்லது 017-6127269 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :