NATIONALSELANGOR

பி.கே.பி. காலத்தில் முஸ்லீம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்கள் செயல்பட அனுமதி

புத்ரா ஜெயா, பிப் 14– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் 12ஆம் தேதி முதல் 18 தேதி வரையிலான காலக்கட்டத்தில் முஸ்லீம் அல்லாதோருக்கான வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கேற்ப வழிபாட்டு நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

ஒரு சமயத்தில் முப்பதுக்கும் குறைவான பக்தர்கள் மட்டுமே ஆலயத்தில் அனுமதிக்கப்பட வேண்டும், வழிபாடு அல்லது பூஜைகள் நடைபெற்ற முடிந்த ஒவ்வொரு முறையும் ஆலயத்தில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் ஆகிவையும் அந்த நிபந்தனைகளில் அடங்கும்.

இது தவிர, பரந்த இணைய ஆற்றல் உள்ள பகுதிகளில் மைசெஜாத்ரா செயலி மூலம் தகவல்களை பதிந்து கொள்ள  வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு வரும் திறன்பேசியைக் கொண்டிராத 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே மை செஜாத்ரா செயலியை பயன்படுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுவர்.

பௌத்த, தோ, வாட் சியாம் ஆலயங்கள் மற்றும் கிறிஸ்துவ  தேவாலயங்கள் அதிகாலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

இந்து ஆலயங்களில் அதிகாலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00  மணி வரையிலும் செயல்பட முடியும்.

 


Pengarang :