NATIONALPBTSELANGORYB ACTIVITIES

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் கோவிட் 19 வைரஸ் நோய்த் தொற்று  பரிசோதனை

கிள்ளான் பிப் 15;-கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ ஏற்பாட்டில்  குறைந்த கட்டணத்தில்  கோவிட் 19 வைரஸ்  தொற்று  பரிசோதனை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக  அறிக்கை  ஒன்றின் அவர்  அலுவலகம்  தெரிவித்துள்ளது.

கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி வாழும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறைந்த விலையில் கோவிட் 19 பரிசோதனை , குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், வயதானவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள் எனப் பி 40 பிரிவைச் சேர்ந்த மக்கள் பயனடைய இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றாட வாழ்வில், பொதுப் இடங்களில், பொது போக்குவரத்தில், வேலைச் செய்யும்  இடங்களில் மக்கள்  நோய்த்தொற்று கண்டவர்களுடன் தெரியாமல் தொடர்பு கொள்ள வேண்டி இருந்திருக்கலாம். அந்த வைரஸ் நம்மைப் பீடித்துள்ளதா?   என்பதை அறிந்து கொள்வதும்,  தகுந்த  சிகிச்சையை விரைந்து பெறுவதே,  நாம் நமது குடும்பத்தினருக்கு, நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்குச் செய்யும் சிறந்து தொண்டாகும்.

அதனால்  நம் குடும்பத்தினருக்கு,  நமது குழந்தைகளுக்கு, வீட்டிலுள்ள முதியவர்களுக்கு  அந்த நோய் தொற்று பரவுவதைத் தடுக்கும் ஒரு மார்க்கமாக  ஒவ்வொருவரும் நோய்த்தொற்று கண்டறியச் சோதனை  செய்துகொள்ள வேண்டும்.

ஆகவே, குறைந்த விலையில் அதாவது வெறும் ரிம 30 க்கு கோவிட் பரிசோதனைகள் வரும் பிப்ரவரி 21 ஆம் திகதி கீழ் காணும் இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திகதி
21 பிப்ரவரி 2021

பிரிவு 1 :
மணி : காலை 10 முதல் பிற்பகல் 1 வரை
இடம் : எம்.பி.கே.கே. பண்டாமாறான் கூடைப்பந்து மைதானம்

பிரிவு 2 :
மதியம் 3.30 முதல் மாலை 6 மணி வரை
இடம் : கிளாங் உத்தாமா கூடைப்பந்து மைதானம் (ஜாலான் சுங்கை கெராமட் 5)

ஏமாற்றத்தை  தவிர்க்க கூகுள் (Google} பாரங்கள் மூலம்  பிப்ரவரி  18ஆம்  தேதிக்குள்  பதிவு செய்து கொள்ளப் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

https://forms.gle/R4kyaT28rFa6TVfF9
மேல் விவரங்களுக்கு அழைக்க வேண்டிய எண்கள்: 012-6066114 / 016-6267797 / 03-33232122

சுற்று வட்டார மக்கள் அனைவரும் இந்தப் பரிசோதனையில் கலந்து கொண்டு பயனடையுமாறு சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார்.

 


Pengarang :