Temu bual bersama Dr Dzulkefly Ahmad di Bangunan Darul Ehsan, Shah Alam pada 23 April 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட் 19 நோய்த்தொற்றை முறியடிக்க பக்காத்தான் உதவும்

பெட்டாலிங் ஜெயா பிப்ரவரி 16;- பிரதமரால் தொடங்கப்பட்ட தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை பக்காத்தான் ஹராப்பான் நோய்த்தடுப்பு குழு ஆய்வு செய்துள்ளது. இந்த நோய்த்தடுப்பு திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசாங்கத்தின் திட்டத்தை பக்காத்தான் ஹராப்பான் நோய்த்தடுப்பு குழு அடிப்படையில் வரவேற்கிறது.

பொருளாதாரத்தை புதுப்பிக்கவும், கோவிட்-19 நோய்த்தொற்றைக் குறைக்கவும், மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும் தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் வெற்றி முக்கியமானது. எனவே அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இதை மிக முக்கியமான தேசிய பணியாக கொள்ள வேண்டும்.

தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தில் சுகாதார அமைச்சின் முயற்சிகளுக்கு பக்காத்தான் ஹராப்பான் உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல் படுத்த பக்காத்தான் ஹராப்பான் மாநில அரசுகளும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர்களும் சுகாதார அமைச்சுக்கு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவர்.

அதே நேரத்தில், இந்த நோய்த்தடுப்பு திட்டம் ஒரு கட்சி பாகுபாடற்ற” முயற்சி, தேசிய நலனுக்கு முக்கியமானது என்பதனை காட்ட பக்காத்தான் ஹராப்பான் எம்.பி.க்களை தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டக் குழுவில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பயனான விளக்கங்களே, இந்த நோய்த்தடுப்பு திட்டத்தின் வெற்றியை நிர்ணயிக்கும். எனவே, குடிமக்களுக்கும் குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் நோய்த்தடுப்புத் திட்டங்களை விளக்க ஒரு விரிவான தகவல் தொடர்புத் திட்டத்தை கொண்டிருக்க, நாங்கள் அரசாங்கத்தை அழைக்கிறோம். அது ஒரு பல்முனை, பல மொழி விளக்கமாக இருத்தல் வேண்டும்.

இது 80 விழுக்காடு மலேசியர்களுக்கான நோய்த்தடுப்பு திட்டமாகவும், 66.7 மில்லியன் தொற்று நோய் தடுப்பு ஊசிகளை தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் ஆகியவற்றின் உட்புறங்களிலுள்ள அனைத்து குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்களுக்குமான ஒரு திட்டம்.

இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு  அனைத்து மக்களுக்கும் பயன் கிட்டும் வண்ணம், போதுமான நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை வசதிகளையும் வாய்ப்புகளையும் எல்லா மக்களுக்கும் வழங்க தக்க முறையில் அதற்கான ஏற்பாடுகள் அமைய வேண்டும் என வற்புறுத்தி கேட்டுக் கொள்வதாக பக்காத்தான்  ஹராப்பான் மத்திய மற்றும் மாநிலங்களின் பிரதிநிதிகள் குழு கூறியது.

அக்குழுவில் முன்னால்  சுகாதார அமைச்சர் மாண்புமிகு டாக்டர் சூல்கிப்லி அஹ்மத் (கோலா சிலாங்கூர்) உட்பட மாண்புமிகு டாக்டர் லீ பூன் சாய் (கோபெங்), மாண்புமிகு  டாக்டர் கெல்வின் யி (பண்டார் கூச்சிங்), மாண்புமிகு டாக்டர் ஹட்டா ராம்லி (லூமுட்), மாண்புமிகு சிம் ட்சின் (பாயன் பாரு), மாண்புமிகு  டாக்டர் ஓங் கியான் மிங் (பாங்கி) ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட

மாண்புமிகு. டாக்டர் சித்தி மரியா (சிலாங்கூர் சுகாதாரத்துறை எஸ்கோ), மாண்புமிகு டாக்டர் நோர்லெலா (பினாங்கு சுகாதாரத்துறை எஸ்கோ),   மாண்புமிகு வீரப்பன் (நெகிரி செம்பிலான் சுகாதாரத்துறை எஸ்கோ) மூன்று மாநில சுகாதாரத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர்


Pengarang :