ECONOMYNATIONALSELANGOR

“பொய்ஸ்” திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டன

கிள்ளான், பிப் 28-  நோய்த் தொற்றை தோன்றும் இடத்திலேயே அடையாளம் கண்டு தடுக்கும் திட்டத்தில் ( பொய்ஸ்) பதிவு செய்யக்கூடிய மேலும் அதிகமான தொழிலியல் நிறுவனங்களை சிலாங்கூர் மாநில நடவடிக்கை பணிக் குழு அடையாளம் கண்டுள்ளது.

நோய்த் தொற்று தாக்கம் அதிகம் உள்ள கிள்ளான்,பெட்டாலிங்,உலு லங்காட் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிலியல் நிறுவனங்கள் மீது தாங்கள் அதிக கவனம் செலுத்தி வருவதாக அந்த பணிக் குழுவின் நிர்வாகி டாக்டர் அகமது முனாவர் ஹெல்மி கூறினார்.

சிலாங்கூரில் வேலையிடங்களை மையமாக கொண்ட கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகமாக உள்ளதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இந்நடவடிக்கையின் வாயிலாக தொழில் துறைகள் சீராக நடைபெறுவதையும் உறுதி செய்ய முடியும் என்றார் அவர். 

தற்போது பல நிறுவனங்கள் எங்களுடன் ஒத்துழைக்க தயாராக உள்ளன. முறையான வழி காட்டுதல் மூலம் இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு முழு விளக்கம் தரவேண்டியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பொய்ஸ் திட்டம் கோவிட்-19 பரிசோதனையை மையமாக கொண்டதல்ல எனக் கூறிய அவர், தொழிலாளர்களின் பாதுகாப்பு உள்பட வேலையிட சுகாதாரத்தை உறுதி செய்வதே இதன் பிரதான நோக்கமாகும் என்றார்.

Pengarang :