ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசி இரண்டாம் காலாண்டில் மலேசியா வந்தடையும்

கோலாலம்பூர், மார்ச் 3– அஸ்ட்ராஸேனேகா கோவிட்-19 தடுப்பூசியை 2021 இரண்டாம் காலாண்டில் மலேசியா பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாப நோக்கின்றி அனைத்து நிலையிலான மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் கடப்பாட்டை தாங்கள் தொடர்ந்து நிறைவு செய்யவுள்ளதாக அஸ்ட்ராஸினேகா நிறுவனத்தின் மலேசியாவுக்கான தலைவர் டாக்ட்ட்ர சஞ்சீவ் பஞ்சால் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதன் வழி மக்களின் அன்றாட வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி அதன் வழி பொருளாதாரம் மீட்சி பெறுவதை உறுதி செய்ய விரும்புகிறோம். இந்நோக்கத்தின் அடிப்படையில் மலேசிய அரசாங்கத்துடன் நாங்கள் அணுக்கமாக ஒத்துழைத்து வருகிறோம் என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கு ஏதுவாக அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிக்கு தேசிய மருந்தக ஒழுங்கு முறை பிரிவு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.

64 லட்சம் அஸ்ட்ராஸேனேகா கோவிட்-19 தடுப்பூசிகளை விநியோகிப்பது தொடர்பான வரலாற்றுப்பூர்வ ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திட்டுள்ள நிலையில் அந்த தடுப்பூசிக்கு மலேசிய மருந்தக ஒழுங்கு முறை அமைப்பு வழங்கிய அனுமதி மேலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக விளங்குவதாக சஞ்சீவ் குறிப்பிட்டார். 

 


Pengarang :