ACTIVITIES AND ADSNATIONALSELANGOR

கோவிட்-19 தாக்கம் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

கோவிட்-19 தாக்கம் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

 

ஷா ஆலம், மார்ச் 5;-கோவிட்-19 பெருந்தொற்று சமூகத்தில் பலருக்கு மனநல பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அஞ்சப்படுகிறது. வேலை இல்லாமை மற்றும் வருமானம் இழப்பு போன்றவை பலரை இந்நிலைக்கு தள்ளப்பட காரணமாக விளங்குகிறது.

இத்தகைய பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஆலோசக சேவையை வழங்கும் வகையில் சுகாதார அமைச்சு சிறப்பு தொலைபேசி சேவையை தொடக்கியுள்ளது. இந்த சேவையின் வாயிலாக மனோரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசக சேவையும் வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.

மனநல ஆரோக்கியம்  மற்றும் மனோவியல் ஆதரவு சேவை மையம்  கடந்த 2020 மார்ச் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 19ஆம் தேதி வரை 36,269 தொலைபேசி அழைப்புகளைப் பெற்றுள்ளது. மன அழுத்தம், அச்ச உணர்வு, எளிதில் சினமடைதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக அவர்கள் இந்த தொலைபேசி சேவையை நாடினர்.

மனோரீதியிலான பாதிப்புகளை எதிர்நோக்குவோருக்கு உதவும் நோக்கில் 03-833 8088 என்ற தொலைபேசி எண்களில் அந்த ஆலோசக சேவை வழங்கப்படுகிறது.

சிலாங்கூர் மாநிலத்தைப் பொறுத்தவரை கிள்ளான், பண்டார் பெட்டானிக்கில் உள்ள சுகாதார மையம் மற்றும் காஜாங் சுகாதார மையம் ஆகியவற்றில் மனோவியல் ஆலோசக சேவையைப் பெறலாம்.

 


Pengarang :