SELANGORYB ACTIVITIES

அதிகமாக தடுப்பூசி பெற்றவர்கள் பட்டியலில் சிலாங்கூருக்கு இரண்டாவது இடம்

ஷா ஆலம், மார்ச் 10– தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக  நேற்று வரை சிலாங்கூரில் 19,251 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதிக தடுப்பூசி பெற்றவர்கள் பட்டியலில் சரவா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அம்மாநிலத்தில் நேற்று வரை 27,500 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் சிலாங்கூரும் மூன்றாவது இடத்தில் கோலாலம்பூரும் உள்ளன. கோலாலம்பூரில் இதுவரை 16,887 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1 லட்சத்து 95 ஆயிரத்து 923 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக கோவிட்-19 தடுப்பூசி விநியோக மதிப்பீட்டு உத்தரவாத சிறப்புச் செயல்குழு கூறியது.

பகாங்கில் 16,342 பேரும் சபாவில் 16,245 பேரும் பேராக்கில் 15,881 பேரும் ஜொகூரில் 15,843 பேரும் கிளந்தானில் 14,185 பேரும் கெடாவில் 11,638 பேரும் திரங்கானுவில் 11,261 பேரும் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 8,385 பேருக்கும் பினாங்கில் 7,781 பேருக்கும் மலாக்காவில் 5,365 பேருக்கும் பெர்லிசில் 4,158 பேருக்கும் புத்ரா ஜெயாவில் 2,941 பேருக்கும் லபுவானில் 2,260 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21ஆம் தேதி 312,390 பைசர்-பயோன்என்டெக் கோவிட்-19 தடுப்பூசிகள் பெல்ஜியத்திலிருந்து மலேசியா வந்து சேர்ந்தன.  இவற்றில் 78,000 தடுப்பூசிகள் சிலாங்கூருக்கு வழங்கப்பட்டன. இந்த தடுப்பூசிகளை முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிது.


Pengarang :