NATIONALSAINS & INOVASI

2040ஆம் ஆண்டில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை 106,000ஆக அதிகரிக்கும்

கோலாலம்பூர், மார்ச் 15- சிறுநீரக செயலிழப்புப் பிரச்னை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் 2040ஆம் ஆண்டுவாக்கில் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரம் பேராக அதிகரிக்கும் என கணிக்கப்படுவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இதில் அச்சமூட்டும் விஷயம் என்னவென்றால் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவோரில் 30 விழுக்காட்டினர் 45 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களாக இருப்பர் என்பதுதான் என்று அவர் சொன்னார்.
இளம் தலைமுறையினருக்கு ஏற்படும் இத்தகைய பாதிப்பினால் நாட்டின் சமூக பொருளாதாரத்திற்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
தற்போது நாடு முழுவதும் சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளான சுமார் 40,000 பேர் டயாலிசிஸ் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையைப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் புதிதாக எட்டாயிரம் சிறுநீரக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு காணும் என அஞ்சப்படுகிறது. இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் 2040ஆம் ஆண்டுவாக்கில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை 106,000ஆக உயரும் என்றார் அவர்.
தேசிய நிலையிலான அனைத்துலக சிறுநீரக தினத்தை நேற்று இங்கு இயங்கலை வாயிலாக தொடக்கி வைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நோயின் தாக்கத்தை கருத்தில் கொண்டு சிறுநீரகத்தை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் பிரசார இயக்கங்களை சுகாதார அமைச்சு, மலேசிய சிறுநீரக அறவாரியம் உள்ளிட்ட அமைப்புகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
2040ஆம் ஆண்டில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை 106,000ஆக அதிகரிக்கும்

கோலாலம்பூர், மார்ச் 14- சிறுநீரக செயலிழப்புப் பிரச்னை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் 2040ஆம் ஆண்டுவாக்கில் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரம் பேராக அதிகரிக்கும் என கணிக்கப்படுவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

Pengarang :