ECONOMYSELANGOR

கோவிட்-19 நோய் குறைந்தால் சொந்த ஊர் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி- அமைச்சு பரிசீலனை

கோலாலம்பூர், மார்ச் 22– எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நோன்பு பெருநாளின் போது சொந்த ஊர்களுக்குச் செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படலாம்.

கோவிட்-19 பெருந்தொற்றின் திடீர் எண்ணிக்கை அதிகரிப்புக்கான சாத்தியம் உள்பட நடப்பு நிலவரங்கள் மீதான இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் தொடர்பான முடிவை சுகாதார அமைச்சு எடுக்கும்.

இவ்விவகாரம் தொடர்பான அனைத்து தரவுகள் மற்றும் ஆதாரங்களை மதிப்பீடு செய்தப் பின்னர் சுகாதார அமைச்சு இதன் தொடர்பான உரிய ஆலோசனைகளை தேசிய  பாதுகாப்பு மன்றத்தின் நுட்பக் குழுவிடம் வழங்கும்.

தற்போதுள்ளதைப் போல் அதிகப்பட்சமாக  எஸ்.ஒ.பி. நடைமுறையை பின்பற்றும் போக்கு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டால் இவ்வாண்டு நோன்புப் பெருநாளின் போது பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது அசாத்தியமான விஷயமாக இருக்காது என்று சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

கோவிட்-19 தொடர்பான  இடர் மதிப்பீட்டில் ஆறு முக்கிய அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படுவதாகவும் அமைச்சு அந்த அறிக்கையில் தெரிவித்தது.


Pengarang :