ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் பூர்வக்குடியினர் நலன் புறக்கணிக்கப்படாது- மந்திரி புசார் உத்தரவாதம்

ஷா ஆலம், மார்ச் 22– சிலாங்கூரில் பூர்வக்குடியினரின் நலன் ஒருபோதும் புறக்கணிக்கப்படாது என்று மாநில அரசு உத்தரவாதமளித்துள்ளது.

மாநிலத்திலுள்ள அனைத்து இனத்தினரும் சரிசமமாக நடத்தப்படுவர் என்பதோடு அவர்களுக்கு இயன்ற அளவு உதவிகளும் வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்திலுள்ள பூர்வக்குடியினர் சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று மாநில அரசு விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் அச்சமூகத்தினர் மற்ற தரப்பினரின் இடையூறும் தொல்லைகளும் இல்லாமல் வாழ்வதற்கு ஏதுவாக விஷேச குடியிருப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன என்றார் அவர்.

இங்குள்ள சுங்கை பும்புன் பூர்வக்குடியினர் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு உணவுக் கூடைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநிலத்திலுள்ள மலாய்க்கார ர்கள், சீனர்கள், இந்தியர்கள் மற்றும் பூர்வக்குடியினர் ஒற்றுமையாகவும் தங்கள் கலாசாரத்தை பின்பற்றியும் வாழ்வதை மாநில அரசு எப்போதும் உறுதி செய்து வரும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :