NATIONAL

வீட்டிலிருந்து வேலை செய்யும் உத்தரவு மீட்பு- அமைச்சர் இஸ்மாயில் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 31– முப்பது விழுக்காட்டு தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற உத்தரவு மீட்டுக் கொள்ளப்படுவதோடு 100 விழுக்காட்டு மனித ஆற்றலை தனியார் துறையினர் பயன்படுத்திக் கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் முழு அளவில் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த அனுமதி வழிவகுக்கும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

அரசாங்கத் துறைகளைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட இலாகாக்களின் சுற்றறிக்கை அல்லது உத்தரவைப் பொறுத்து வேலைக்கு வரும் பணியாளர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

தனியார் துறையில் பணிபுரியும் நிர்வாக, கண்காணிப்பு, நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களும் 100 விழுக்காடு  பணியிடத்தில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவர் என்றார்  அவர்.

தொழில்துறையைப் பொறுத்தவரை தொலைவிலிருந்து வேலை செய்வது சாத்தியமற்றது என்பதால் வீட்டிலிருந்து வேலை செய்யும் உத்தரவை தனியார் துறையில் அமல்படுத்த இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள மாநிலங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் உத்தரவை அரசாங்கம் அமல்படுத்தியிருந்தது.


Pengarang :