ECONOMYNATIONALSELANGOR

இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்கள் எல்லை கடக்க அனுமதி- அரசு பரிசீலனை

கூச்சிங், ஏப் 2- கோவிட்-19  தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை முழுமையாக பெற்றவர்கள் மாநில எல்லைகளை கடப்பதற்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு செல்லவும் அனுமதிக்கப் படுவதற்கான சாத்தியத்தை பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கோடி காட்டியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

இவ்விவகாரத்தை தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் நான் எழுப்பவிருக்கிறேன். இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்கள் எந்த இடையூறும் இன்றி மாநில எல்லைகளை கடப்பதற்கு அனுமதிக்கும் சாத்தியத்தை ஆராயவுள்ளோம் என்றார் அவர்.

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வதை அனுமதிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். தடுப்பூசி பெற்ற மலேசியர்களுக்கு பயண அனுமதி வழங்குவது தொடர்பில் பல நாடுகளுடன் பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டுளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை வரை நாட்டில் 215,395  பேர் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுள்ளனர்.

Pengarang :