ECONOMYSELANGOR

காஜாங்கில் 870  டாக்சி, பள்ளி பஸ் ஓட்டுநர்களுக்கு உணவு  பொட்டலங்கள் விநியோகம்

ஷா ஆலம், ஏப் 11– சிலாங்கூர் மாநில அரசின் பரிவுத் திட்டத்தின் கீழ் காஜாங் நகராண்மைக் கழகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 870 டாக்சி மற்றும் பள்ளி பஸ் ஓட்டுநர்களுக்கு  உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.

இரண்டாவது முறையாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்  நோக்கில் இந்த உணவு உதவித் திட்டம் அமல்படுத்தப்பட்டதாக காஜாங் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ ஜூல்கிப்ளி காலிட் கூறினார்.

சுமார்  100 வெள்ளி  மதிப்பிலான அந்த உணவுப் பொட்டலங்கள் 10 கிலோ அரிசி, கோதுமை மாவு, சீனி, கெட்டிப்பால், சமையல் எண்ணெய் ஆகிய உணவுப் பொருள்களை கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.

கோவிட்-1 9 பெருந்தொற்று காரணமாக கடுமையான வருமான பாதிப்புக்கு உள்ளான டாக்சி மற்றும் பள்ளி பஸ் ஓட்டுநர்களின் சுமையை ஓரளவு குறைப்பதில் இந்த உணவு உதவித் திட்டம் ஓரளவு உதவும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவு அவர் குறிப்பிட்டார்.

காஜா ஸ்டேடியம் வளாகத்தில் இந்த உணவு உதவித் திடடத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த  திட்டம் தொடக்கி வைக்கப்படுவதன் அடையாளமாக 30 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்ட்டன.

எஞ்சிய பயனாளர்கள் சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்தின் தரவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டு இரு வார காலத்தில் உதவிப் பொருள்கள் நேரடியாக ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.

நோய்த் தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவும் வகையில் 43 லட்சத்து 50 வெள்ளி ஒதுக்கீட்டில் உணவு உதவித் திட்டத்தை மாநில அரசு கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது.


Pengarang :