Penguat kuasa MPKL memasang tali kuning di sebuah kilang
ECONOMYSELANGOR

காஜாங் வட்டாரத்தில் 112 சட்டவிரோத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை

ஷா ஆலம், ஏப் 12– இவ்வாண்டு ஜனவரி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை காஜாங் வட்டாரத்தில் 112 சட்டவிரோத தொழிற்சாலைகள் மீது நடவடிகைகை எடுக்கப்பட்டுள்ளது.

உலு லங்காட் பகுதியில் மிக அதிகமாக அதாவது 39 தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காஜாங் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ ஜூல்கிப்ளி காலிட் கூறினார்.

அதனை தொடர்ந்து செராசில் 25 தொழிற்சாலைகளும் செமினியில் 20 தொழிற்சாலைகளும் உலு செமினியில் 15 தொழிற்சாலைகளும் காஜாங்கில் 10 தொழிற்சாலைகளும் பெரணாங்கில் 3 தொழிற்சாலைகளும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சட்டப்பூர்வாக்கும் நடவடிக்கையில் பட்டியலிடப்பட்ட 543 தொழிற்சாலைகளில் மேற்கண்ட தொழிற்சாலைகளும் உள்ளடக்கப்பட்டிருந்ததாக அவர் சொன்னார்.

ஆற்றோரங்களில் செயல்படும் சட்டவிரோத தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்றை நகராண்மைக்கழகம் அமைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு மார்ச்  மாதம் வரையிலன காலக்கட்டத்தில் பல்வேறு குற்றங்களுக்காக 73 தொழிற்சாலைகளுக்கு குற்றப்பதிவு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :