MEDIA STATEMENTSELANGOR

கிள்ளானில்  சட்டவிரோத மதுபானங்கள்  விநியோகம்- அறுவர் கைது

கோலாலம்பூர், ஏப் 23-  சட்டவிரோத மதுபானங்களை கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் விநியோகித்து வந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் அறுவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நான்கு உள்நாட்டினர் மற்றும் இரு மியன்மார் பிரஜைகளை உள்ளடக்கிய அந்த கும்பல் கடந்த புதன் கிழமை கிள்ளானில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பிடிபட்டதாக புக்கிட்  அமான்  உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் டத்தோ அஸ்ரி அகமது கூறினார்.

இச்சோதனை நடவடிக்கையின் போது 85,320 வெள்ளி மதிப்பிலான பல்வேறு வகை மதுபானங்கள் அடங்கிய 482 பெட்டிகளை தாங்கள் பறிமுதல் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, சுமார் 2 லட்சத்து 85ஆயிரத்து 320 வெள்ளி மதிப்பிலான மூன்று கார்கள் ஒரு லோரி ஆகியவையும் இந்நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.

28 முதல் 37 வயது வரையிலான அந்த ஆடவர்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 117வது பிரிவின் கீழ் விசாரணைக்காக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

1967ஆம் ஆண்டு சுங்கத் துறை சட்டத்தின் 135(1)(இ) பிரிவின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.


Pengarang :