ECONOMYPBTSELANGOR

நோன்பு பெருநாளை முன்னிட்டு இந்திய சமூகத் தலைவர்களுக்கு 1,000 வெள்ளி சிறப்பு உதவித் தொகை 

ஷா ஆலம், ஏப் 23- நோன்புப் பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு அறிவித்துள்ள சிறப்பு நிதி உதவித் திட்டத்தின் கீழ் மாநிலத்திலுள்ள இந்திய சமூகத் தலைவர்களுக்கும் 1,000 வெள்ளி வழங்கப்படுகிறது.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு சமூகத் தலைவர்கள் வழங்கி வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அனைத்து சமூகத் தலைவர்களுக்கும் இந்த நிதி உதவி வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தின் ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற அரசு உழியர்களுடனான கூட்டத்தில் மந்திரி புசார் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

எம்.பி.கே.கே. தலைவர்கள், கம்போங் பாரு பொது உறவு அதிகாரிகள், இந்திய சமூகத் தலைவர்கள், மகளிர் திறன் ஆய்வாளர்கள் ஆகியோர் இந்த நிதியுதவித் திட்டத்தின் வாயிலாக பயன்பெறுவர் என அவர் தெரிவித்தார்.

சிலாங்கூரில் இந்திய சமூகத் தலைவர் பதவிக்கு 60 இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 54 இடங்கள்  நிரப்பப்பட்டுள்ளன.


Pengarang :