ECONOMYNATIONAL

268,800 அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகள் மலேசியா வந்தடைந்தன

கோலாலம்பூர், ஏப் 25– மலேசியா முதல் கட்டமாக 268,800 அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகளை  பெற்றுள்ளதக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

கோவாக்ஸ் பிரத்தியேக மையம் மூலம் பெறப்பட்ட இந்த தடுப்பூசிகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.20 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்ததாக அவர் சொன்னார்.

நாட்டின்  மக்கள் தொகையில் மூன்று விழுக்காட்டினருக்கு செலுத்தும் நோக்கில் இந்த அஸ்ட்ராஸேனோ தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த தடுப்பூசி பிரத்தியேக இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று தெங்காரா நாடாளுமன்ற தொகுதியில் மானியம் வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து கேட்கப்பட்ட போது, தேசிய மருந்தக ஒழுங்கு முறை பிரிவின் அங்கீகாரத்திற்குப் பின்னரே அந்த தடுப்பூசியைப் பெற  கோவிட்-19 தடுப்பூசி விநியோகத்தை அங்கீகரிக்கும் சிறப்புக் குழு முடிவெடுத்ததாக அவர் பதிலளித்தார்.

அந்த தடுப்பூசி பாதிப்பைக் காட்டிலும் அதிக அனுகூலத்தை தருவதை உற்பத்தி நிறுவனம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் அவர் கூறினார்.

 


Pengarang :