Atlet Malaysia memiliki peluang beraksi pada Olimpik 2020 di Jepun kerana masih terdapat empat slot dari benua Asia untuk diisi.
NATIONALPBTSUKANKINI

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 68 விளையாட்டாளர்கள் தேர்வு பெறுர்- எம்.எஸ்.என். நம்பிக்கை

இஸ்கந்தார் புத்ரி, ஏப் 26- இவ்வாண்டு ஜூலை மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிக்கு 68 ஆட்டக்காரர்கள் தேர்வு பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் பாரா ஒலிம்பிக் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியில் பங்கேற்கும் 35 விளையாட்டாளர்களும் அடங்குவர்.

தற்போது வரை 12 விளையாட்டாளர்களும் 14 மாற்றுத் திறனாளி விளையாட்டாளர்களும்  உலகின் அந்த  மிகப்பெரிய போட்டி விளையாட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய விளையாட்டு மன்றத்தின் (எம்.எஸ்.என்.) நிர்வாக இயக்குநர் டத்தோ அகமது ஷபாவி இஸ்மாயில் கூறினார்.

மலேசிய பொது பூப்பந்து போட்டி மற்றும் 2021 உலகக் கிண்ண நீச்சல் போட்டி வாயிலாக மேலும் அதிகமான விளையாட்டார்கள் அப்போட்டிக்கு தேர்வு பெறும் நிலையில் உள்ளனர் என்றார் அவர்.

ஒலிம்பிக் போட்டிக்கு 33 விளையாட்டாளர்கள் தேர்வு பெறுவர் என்பது எங்களின் நம்பிக்கையாகும். விளையாட்டாளர்கள் தேர்வான பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாரா ஒலிம்பிக் போட்டியைப் பொறுத்தவரை வரும் ஜூன் மாதம் நடைபெறும் இறுதித் தேர்வை பொறுத்து 35 பேர் வரை பங்கேற்க முடியும் என எதிர்பார்க்கிறோம்  என்று அவர் சொன்னார்.

‘2020 ரோட் டு தோக்கியோ‘ ஆதரவு பயணத்தை கொடியசைத்து  தொடக்கி வைத்தப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜோகூர் மாநில சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஓன் ஹபிஸ் கசாலியும் கலந்து கொண்டார்.

இதனிடையே, ஒலிம்பிக் போட்டிக்கு வெற்றிகரமாக தேர்வு பெறும் ஜோகூர் விளையாட்டாளர்களுக்கு 5,000 வெள்ளி ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று ஓன் ஹபிஸ்  சொன்னார்.

 


Pengarang :