ECONOMYNATIONALPENDIDIKAN

கல்வி வழி  மனித மூலதன மேம்பாடு- அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்க சிலாங்கூர் விருப்பம்

ஷா ஆலம், 29– சிலாங்கூர் மாநிலத்தில் கல்வி வழி  மனித மூலதன மேம்பாட்டைக் கொண்டு வரும் முயற்சியில் அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு சார அமைப்புகளின் ஒத்துழைபை மாநில அரசு பெரிதும்  வரவேற்கிறது.

இத்தரப்பினரின் விவேக சிந்தனை பங்காளித்துவத்தின் வாயிலாக மாநிலத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியும் என்று அவர் சொன்னார்.

மனித மூலதன மேம்பாட்டுத் திட்டம் என்பது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படக்கூடிய ஒரு நடவடிக்கை என்பதோடு அனைத்து தரப்பினரின் பங்கேற்பின்றி இதனை வெற்றி பெறச் செய்ய இயலாது என்றார் அவர்.

வரும் 2025ஆம் ஆண்டிற்குள் விவேக மாநிலமாக சிலாங்கூரை மாற்றும் தொலைநோக்குத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதில் கல்வியின் தரம் உயர்த்தப்படுவது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாயாசான் சிலாங்கூர் அறவாரியத்தின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி  நடைபெற்ற கல்வித் திட்ட ஒத்துழைப்பு மீதான ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கில் அவர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வு இங்குள்ள மந்திரி புசார் இல்லத்தில் நடைபெற்றது.

யாயாசான் சிலாங்கூர் அறவாரியத்துடன் இணைந்து கல்வி தொடர்பான புதிய திட்டங்களை அமல்படுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், இதன் வழி அந்த அறவாரியத்தின் அடைவுநிலை மேலும் மேம்பாடு காண்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றார்.

 


Pengarang :